வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆடியன்ஸை கதறவிட்ட இந்தியன் தாத்தா.. தல தப்பியதா லைக்கா.? இந்தியன் 2 முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Indian 2 Collection: இந்தியன் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில் 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 வெளியாகி உள்ளது. நேற்று உலக அளவில் ரிலீசான இப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இது நிச்சயம் யாரும் எதிர்பாராதது தான்.

படகுழுவினரே கூட இதனால் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கின்றனர் இதற்கு முக்கிய காரணம் முதல் பாகத்தில் இருந்த மாஸ் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதுதான். அது மட்டும் இன்றி முதல் பாகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமானின் இசை தான்.

அது இரண்டாம் பாகத்தில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது ஷங்கர் எதற்காக அனிருத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அனிருத் தன்னால் முடிந்ததை கொடுத்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க கமல் நடிப்பில் மிரட்டி இருந்தாலும் மேக்கப் அவருக்கு பொருந்தவில்லை. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதேபோல் சில லாஜிக் மீறல்களும் சங்கர் படமா இது என கேட்க வைத்துள்ளது.

இந்தியன் 2க்கு கிடைத்த வரவேற்பு

இப்படியாக ஒரே நாளில் அதிருப்தியை சம்பாதித்த இந்தியன் 2 வசூல் நிலவரம் பற்றி காண்போம். படம் வெளிவருவதற்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் தாறுமாறாக இருந்தது. அதிலும் வெளிநாடுகளில் படத்திற்கான முன்பதிவு கோடிகளை தாண்டியது.

அதை வைத்துப் பார்க்கும்போது இந்திய அளவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 26 கோடிகளாக இருக்கிறது. இதில் முதல் காட்சிக்கு கமல் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளில் ஃபேமிலி ஆடியன்ஸ் வரவும் இருந்தது.

பகல் காட்சிகளை விட மாலை மற்றும் இரவு காட்சியில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதன்படி வார இறுதி நாளான சனி ஞாயிறுகளில் இது அதிகரிக்குமா அல்லது நெகட்டிவ் விமர்சனங்களால் குறையுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

மேலும் வெளிநாடுகளில் படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்ததால் உலக அளவில் இப்படம் 50 முதல் 56 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்தியன் 2 போட்ட காசை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியன் 2 படத்தின் வசூல் லாபமா.?

Trending News