திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்தியன் 2 படமே பெரிய ஊழல்.. நேதாஜி தான் வரணும், பிரபலம் கொடுத்த நெகட்டிவ் விமர்சனம்

Indian 2: கமல் ரசிகர்களின் 7 வருட ஏக்கத்தை தீர்க்கும் பொருட்டு நேற்று இந்தியன் 2 ஆரவாரமாக வெளியானது. ஆனால் முதல் காட்சி முடிந்த உடனேயே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியது.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் காலையிலேயே முதல் காட்சி ஆரம்பித்து விட்டது. அதனாலயே ரசிகர்களின் விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் அதிவேகமாக பரவியது.

இருப்பினும் தமிழ்நாட்டில் படம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆவலும் இருந்தது. ஆனால் தமிழ் ரசிகர்களும் படத்தை பார்த்துவிட்டு இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

ஏனென்றால் முதல் பாகம் வேற லெவலில் கொண்டாடப்பட்டது. அதனாலேயே இரண்டாம் பாகம் அதைவிட 100 மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சங்கர் அதை பூர்த்தி செய்ய தவறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதன்படி தற்போது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தியன் 2 படத்தை பங்கம் செய்திருக்கிறார். சங்கர் ஒரு பூமர் இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி காட்சிகளை வைக்கவில்லை. இன்னும் அதே பழைய பாணியில் தான் இருக்கிறார்.

ப்ளூ சட்டை விமர்சனம்

மேலும் படத்தில் இந்தியன் தாத்தா வில்லனை கொன்றுவிடுவார் என நமக்கே தெரியும். ஆனால் அந்த சண்டை காட்சிகள் எல்லாம் அரை மணி நேரத்திற்கு நீடிக்கிறது. கிட்டத்தட்ட 3 மணி நேர படம் நம்மை தான் கதற வைத்துள்ளது. இதைத்தான் தாத்தா வராரு கதற விட போறாரு என நாசுக்காக சொல்லி இருக்கின்றனர்.

இது தவிர இந்தியன் தாத்தா மேக்கப் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. முதல் பாகத்திலேயே அவருக்கு வயது 70 இருக்கும். அப்படி என்றால் இந்த இரண்டாம் பாகத்தில் நிச்சயம் அதிக வயது தான் இருக்கும்.

ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல் பறந்து பறந்து சண்டை போடுவதும் வர்மக்கலை பற்றி சாகப்போகும் வில்லனிடம் புக் விற்பது போல் கிளாஸ் எடுப்பதும் என சொதப்பி இருக்கின்றனர். இது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

அதாவது இப்படமே ஊழலை ஒழிப்பது பற்றி தான். ஆனால் இந்தியன் 2 படமே மிகப்பெரும் ஊழல். ஒரே பகுதியில் முடிக்க வேண்டிய இப்படத்தை இழுத்து மூன்றாம் பாகம் வரை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் அதிகமாக கல்லா கட்ட முடியும்.

இது எவ்வளவு பெரிய ஊழல். இவர்களை ஒழிக்க இந்தியன் தாத்தாவின் குருநாதரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் வரவேண்டும் என ப்ளூ சட்டை கலாய்த்து தள்ளி இருக்கிறார். ஆக மொத்தம் இந்தியன் 2 எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டது.

ரசிகர்களை ஏமாற்றியதா இந்தியன் 2.?

Trending News