புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ப்ராஜெக்ட் கே-வால் பரிதவிக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்

Indian 2: கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டாலும் சில பல தடைகளை கடந்து இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. சமீபத்தில் கூட இப்பட காட்சிகளை பார்த்து திருப்தி அடைந்த கமல் சங்கருக்கு விலை மதிப்புள்ள வாட்ச்சை பரிசளித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்காத அளவுக்கு சங்கர் இப்போது கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம். அதாவது இந்தியன் 2 படம் அடுத்த வருடம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது ப்ராஜெக்ட் கே படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

Also read: கமலின் பெரிய ரசிகன் யார்.? லோகேஷை ஓரங்கட்டி மாஸ் காட்டிய இயக்குனர்

இதுதான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. பாகுபலி நாயகனான பிரபாஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இதற்காக அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச சம்பளமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு சமீபத்தில் வந்த நிலையில் தற்போது இப்படம் பொங்கலை குறி வைத்து வெளியாக இருப்பது இந்தியன் 2-வுக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க தயாரிப்பாளரான உதயநிதி இப்படம் ஏப்ரல் மாதம் வரும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Also read: பேரை வாடகைக்கு வாங்கி நடித்த 5 ஹீரோக்கள்.. சீயானை ஓரம் கட்டி கூகுளில் இடம் பிடித்த கமலின் விக்ரம்

ஆனால் அந்த நாளன்று ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இப்படிப்பட்ட இடியாப்ப சிக்கலால் இந்தியன் 2 எப்போது தான் வெளியாகும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால் மூன்று படங்களும் பான் இந்தியா படமாக தான் உருவாகி இருக்கிறது.

அதிலும் இரண்டு படம் கமல் நடிப்பில் வெளியாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனையை ஆண்டவர் எப்படி சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பும் இப்போது எழுந்துள்ளது. அந்த வகையில் ப்ராஜெக்ட் கே படத்தால் இந்தியன் 2 ரிலீஸ் தள்ளி போகுமா அல்லது இந்த வருட இறுதியிலேயே வெளியாகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: யாரும் தேவையில்லை என்று டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த 7 இயக்குனர்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த உலக நாயகன்

Trending News