வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன் 2 லைக்கா எடுக்கும் அஸ்திரம்.. ஏ எம் ரத்தினத்துக்கு அடிக்க போகும் ஜாக்பாட்

Indian-2 : லைக்கா, இந்தியன் 2 பிசினஸை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் இந்த படத்திற்கான வியாபார பேச்சு வார்த்தைகளை தொடங்கியுள்ளது. அமேசான், நெட் ஃப்ளீஸ், கலைஞர் டிவி என எல்லோரும் கோடிக்கணக்கில் டீல் பேசி வருகிறார்கள். இந்தியாவில் நடைபெறும் ஊழல் சம்பந்தப்பட்ட ஒரு பிளாக்பஸ்டர் தான் இந்தியன் 2 படம்.

1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கிய மூன்றாவது படம் இந்தியன். அப்பவே இந்தியாவில் நடைபெற்ற ஊழல் அராஜகத்தை தோலுரிக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நூறு நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில், இதன் இரண்டாவது சிங்கள் மே 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்பொழுதே இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் சங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் இறங்கிவிட்டனர். பிரமாண்டமாக ஆடியோ லான்ச் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

அது மட்டும் இன்றி இந்தியன் பட தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதாவது இப்பொழுது ரீ ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் வேட்டை ஆடியது. இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஏ எம் ரத்னம் தான்.

ஏ எம் ரத்தினத்துக்கு அடிக்க போகும் ஜாக்பாட்

இப்பொழுது கில்லி போல் இந்தியன் முதல் பாகத்தையும் ரீ ரிலீஸ் செய்தால் இந்தியன் இரண்டாம் பாகத்திற்கு பெரிய பிரமோஷன் ஆக அமையும். அதுபோக 2k கிட்ஸ்க்கு இந்தியன் படத்தை பற்றி சரியான ஒரு புரிதலும் ஏற்படும். அதுவே இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியன் படத்தை தூசி தட்டி விட்டனர். இந்த படத்தை ரீ ரீலீஸ் செய்யவும் நாள் பார்த்து விட்டனர். இரண்டாம் பாகத்துக்கு முன்னரே ஜூன் 6ஆம் தேதி இந்தியன் படத்தை அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்கின்றனர். ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் முதல் பாகமும் வெளியானால் வியாபாரத்திற்கு பெரும் பாசிட்டிவாக அமையும்.

இதுவரை லைக்கா வெளியிட்ட போஸ்டர்

Trending News