இந்தியன் 2 முதல் தக் லைஃப் வரை அடுத்த 6 மாசம் வெளிவர உள்ள 9 படங்கள்.. ரேஸில் வெறிகொண்டு காத்திருக்கும் கங்குவா

9 films to release in the next 6 months: இந்த வருடத்தில் வெளிவந்த கோலிவுட் படங்களை விட மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழிகள் படங்கள் தான் மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் பிரேமலு, மஞ்சுமால் பாய்ஸ் மற்றும் சமீபத்தில் வெளியான கல்கி போன்ற இது மாதிரியான படங்கள் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி விட்டது. ஆனால் இங்கே வெளிவந்த லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர், கருடன் போன்ற படங்கள் சராசரியான வசூலை பெற்று உள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு முடிவதற்குள் எப்படியாவது ஒரு சாதனையை கொடுத்து விட வேண்டும் என்று அடுத்த ஆறு மாசத்தில் கிட்டத்தட்ட 9 படங்கள் வெளிவர இருக்கிறது. மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழல் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன் இந்தியன் படத்தின் மூலம் நல்ல விஷயங்களை காட்டப்பட்டிருக்கும்.

படையெடுத்து வரப்போகும் 9 படங்கள்

இதன் தொடர்ச்சியாக 28 வருடங்களுக்குப் பின் மறுபடியும் இந்தியன் இரண்டாம் பாகமாக சங்கர் கமலை வைத்து பிரமாண்டமாக உருவாக்கி இருக்கிறார். அதன்படி இப்படம் அனைத்து திரையரங்களிலும் வருகிற ஜூலை 12ஆம் தேதி ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து தனுஷ் இயக்கி, எழுதி, அவரை நடித்த ரயான் படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் பண்ணுவதற்கு தயாராகிவிட்டது.

அடுத்ததாக இந்தா வருது அந்தா வருது என்று பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்த பா ரஞ்சித், இயக்கிய விக்ரமின் தங்கலான் படமும் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த வகையில் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக போகிறது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளிவர போகிறது.

மேலும் இதுவரை இந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வித்தியாசமான கேரக்டராக சூர்யா நடித்தது இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பல ரிஸ்க் எடுத்து மாபெரும் வெற்றியை கொடுக்கும் வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா படம் உருவாகி இருக்கிறது. இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரப் போகிறது.

ஆனால் இதில் தான் ஒரு உள்குத்து வேலையும் நடந்திருக்கிறது. அதாவது இந்த படம் ஒன் மேன் ஆர்மியாக வெளிவரப் போவதில்லை. இந்த படத்துடன் போட்டி போடுவதற்கு ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் தயாராகிவிட்டது. அதன்படி இந்த இரண்டு படமும் நேருக்கு நேர் மோதும் வகையில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக போகிறது.

ஆனாலும் எப்படியும் நம் படத்திற்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ரேசில் வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து இந்த வருடமாவது அஜித் படம் வெளிவந்துவிடாதா என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியாக விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்படத்தை நவம்பர் மாதத்தில் வெளியிடப் போவதற்கு முடிவெடுத்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த வருட இறுதியான டிசம்பர் மாதத்தில் வெளியிட்டு விடலாம் என்று மும்மரமான வேலைகளை பார்த்து வருகிறார்கள்.

இப்படி மீதம் இருக்க ஆறு மாதத்திற்குள் 9 படங்கள் தொடர்ந்து ரிலீசாகி அதிக அளவில் வசூலை பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் படையெடுத்து வர காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படங்களில் எந்த படம் அதிக வசூலையும், ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களையும் பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்து வர இருக்கும் சில படங்களின் அப்டேட்

Next Story

- Advertisement -