ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரம்மாண்ட செலவாளி ஷங்கர் என்ற பெயரை மாற்றும் இந்தியன் 2.. 90% பணத்தை இப்பவே எடுத்த லைக்கா

Indian 2: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரம்மாண்டம் என்றாலே ஷங்கர் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். பெரிய பட்ஜெட் படங்களை எடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் லாபத்தையும் பெற்று தந்து விடுவார். இப்போது கமலை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படங்களை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை லைக்கா மற்றும் உதயநிதி இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் ஷங்கர் இதுவரை எடுத்த காட்சிகளை ஒரு சேர்த்து பார்த்துள்ளார். படம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக இருக்கிறதாம்.

Also Read : ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஷங்கர்.. விரைவில் கமலுக்கு கொடுக்க போகும் ஷாக்

ஆகையால் இதை இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்கள பிரித்து விடலாம் என்று ஷங்கர் முடிவு செய்து இருக்கிறார். எனவே இதற்கு கமலை வைத்து இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் இந்தியன் 2 படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.

அதுவும் பெரிய தொகை கொடுத்து டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி இருக்கிறதாம். இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நெட்பிளிக்ஸ் அதில் 90 சதவீதம் அதாவது 220 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்தியன் 2 படம் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியாகும்.

Also Read : நிம்மதியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் தவிக்கும் ஷங்கர்.. 2 மகள்களால் கண்ணீர் வடிக்கும் சோகம்

ஆகையால் தியேட்டரிலேயே பல மடங்கு இந்தியன் 2 படம் எப்படியும் லாபம் பார்த்து விடும். மேலும் இப்பவே லைக்கா இந்தியன் 2 படத்திற்காக போட்ட பட்ஜெட்டில் 90% கைக்கு வந்துவிட்டது. இனிமேல் வருவது எல்லாமே லாபம் தான். இதுவரை தயாரிப்பாளர்கள் ஷங்கரை பிரம்மாண்ட செலவாளி என்று விமர்சித்து வந்தார்கள்.

இந்தியன் 2 படம் மூலம் இந்த பெயர் மாறி பிரம்மாண்ட வசூல் செய்யும் இயக்குனர் என்ற பெயர் ஷங்கருக்கு கிடைக்க இருக்கிறது. இத்தனை வருடம் போட்ட கடின உழைப்புக்கு இதன் மூலம் லாபம் கிடைத்திருக்கிறது. மேலும் இந்தியன் 2 அப்டேட் எப்போது வரும் என கமல் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : வெகுளித்தனமாய் பிரபு நடித்த 5 படங்கள்.. ஒரே மாதிரியா.? இழந்த கேரியரை தூக்கி நிறுத்திய கமல்

Trending News