வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சித்தார்த்தை வைத்து ரஜினியை செஞ்சு விட்ட ஷங்கர்.. இந்தியன் 2 ட்ரெய்லரால் கமலுக்கு வந்த தலைவலி

Indian 2 trailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொள்ளாத தமிழ் சினிமாவே இல்லை என்று சொல்லிவிடலாம் போல. ஒன்று அவரை புகழ்ந்து பேசி ஒரு வசனம் இப்போ வரும் படங்களில் இருக்கிறது. இல்லை என்றால் அவரை கிண்டல் செய்வதுபோல் மறைமுகமாக ஏதாவது ஒரு வசனத்தை சொருகி விடுகிறார்கள்.

ஆனால் அவருடைய ஆருயிர் நண்பன் கமலஹாசன், ரஜினியை பங்கமாக கலாய்த்து இருக்கிறார் இந்தியன் 2 ட்ரைலரில். நேற்று நடிகர் கமலஹாசனின் நீண்ட நாள் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியானது.

படம் முதல் பாகத்தை போலவே முழுக்க முழுக்க ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கேரக்டர் தான் முக்கியம் என்று பார்த்தால், பேசப்பட்ட வசனம் அதைவிட வெயிட்டாக இருக்கிறது.

இந்தியன் 2 ட்ரெய்லரால் கமலுக்கு வந்த தலைவலி

இந்த வசனத்திற்கு முன்னால் எதனால் ரஜினி இதற்கு உள்ளே வந்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்வோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தது எல்லோருக்குமே நினைவிருக்கும்.

திடீரென அரசியலுக்கு வருவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்ற வார்த்தையை சொல்லி இருந்தார். அதன் பின்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தை காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்.

ரஜினி சொன்ன சிஸ்டம் சரியில்லை என்ற வார்த்தையை மக்களே மறந்து இருந்த நிலையில் மீண்டும் இந்தியன் 2 படம் ஞாபகப்படுத்தி விட்டது. இதன் ட்ரெய்லர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில வினாடிகளில் சித்தார்த் ரொம்பவும் உணர்ச்சி பொங்க இங்க சிஸ்டம் சரியில்லை என்று வாய்கிழையே பேசுவோம், ஆனா அதை சரி செய்ய ஒரு துளி கூட கிள்ளி போட மாட்டோம் என்று வசனம் பேசி இருக்கிறார்.

அடடா! மறந்திருந்த தமிழ்நாட்டு மக்களை மீண்டும் தூண்டி விட்டது போல் இது ஆகிவிட்டது. கமலும் ரஜினியும் உயிர் நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கமலுக்கு ட்ரைலரை பார்க்கும்போது கூட தன்னுடைய நண்பர் சொன்ன வசனம் இது என்று தெரியாமல் போனது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

Trending News