கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்தது. இப்படம் வெளியாகவே ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல பிரச்சனைகளால் இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. கண்டிப்பாக இப்படம் வெளியாகாது என்றுதான் பலர் நினைத்தார்கள்.
இருப்பினும் கமல் மற்றும் ஷங்கர் கூட்டணி என்பதால் இப்படத்தை எதிர்பார்த்து இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய இந்தியன் 2 திரைப்படம் கடுமையான ட்ரோல்களுக்கும் ஆளானது. வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. முக்கியமாக ஷங்கர் வாழ்க்கையில் இப்படி ஒரு ட்ரொல்லை அவர் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம்.
இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் தோல்வியடைந்ததால் இந்தியன் 3 வெளியாகுமா ? என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. ஏற்கனவே இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளை ஷங்கர் படமாக்கியிருப்பதால் கண்டிப்பாக இப்படத்தை வெளியிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த முறை விநியோகஸ்தர்கள் கொஞ்சம் உஷார் ஆகி விட்டனர். படம் கண்டிப்பாக ஓட வாய்ப்பு குறைவு தான் என்று முடிவே செய்து விட்டனர். அதனால் theatre-ஐ நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என்று, படத்தை ott-யில் நேரடியாக வெளியிட முடிவு செய்துவிட்டது படக்குழு.
எந்த ott, என்று வெளியாகிறது என்பதை இனிமேல் தான் அறிவிப்பார்களாம். ஏற்கனவே, netflix-இடம் 125 கோடி தர சொல்லி ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தற்போது அதிகாரபூர்வமாகவே இந்த தகவல் வெளியாகிவிட்டது. இந்த நிலையில், “பாவம் ஆண்டவர், இந்தியன் 3 பரிதாபங்களுக்கு பயந்து தான் இந்த முடிவை ஷங்கரை எடுக்க சொல்லி வற்புறுத்தியிருப்பார் ” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.