வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வீரசேகரனாக மிரட்டும் கமல்.. சர்ப்ரைஸ் கொடுத்த காஜல், லீக்கான இந்தியன் 3 ட்ரெய்லர்

Indian 2: கமல் ரசிகர்களின் ஏழு வருட காத்திருப்பு தான் இந்தியன் 2. 28 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் இப்போதும் கூட ஆடியன்ஸை புல்லரிக்க வைக்கும். அதற்கு பக்க பலமாக இருந்தது ஏ ஆர் ரகுமானின் இசை தான்.

அதையடுத்து இந்தியன் 2 அறிவிப்பு வந்தபோது அனைவருக்குமே அது மிகப்பெரும் சர்ப்ரைஸ் ஆகத்தான் இருந்தது. ஆனால் பல வருடங்கள் இழுத்தடித்த நிலையில் இன்று மீண்டும் சேனாபதி நமக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

இதை ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதில் பலரும் இந்தியன் 2 ஏமாற்றமாக இருக்கிறது என குறிப்பிடுகின்றனர்.

kamal
kamal

இது பட குழுவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தமிழகத்தில் தற்போது முதல் காட்சி முடியவில்லை என்பதால் அவர்களின் விமர்சனத்திற்காகவும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் இறுதியில் இந்தியன் 3 ட்ரெய்லர் வெளிவரும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

நெட்டிசன்களால் கடுப்பில் லைக்கா

இது கசிந்து விடக்கூடாது என்பதில் லைக்கா தரப்பில் கவனமாகத் தான் இருந்தனர். ஆனாலும் நெட்டிசன்கள் அதை தற்போது இணையத்தில் லீக் செய்திருக்கின்றனர். இதுதான் இப்போது தயாரிப்பு தரப்புக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

kajal-agarwal
kajal-agarwal

இது ஒரு புறம் இருக்க அந்த ட்ரெய்லரில் சேனாபதி தன்னுடைய தந்தை வீரசேகரன் பற்றி சொல்லும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சுதந்திரப் போராட்டத் தியாகியாக வரும் வீரசேகரனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் இருக்கிறார்.

அந்த வீரசேகரன் லுக்கில் கமல் தாறுமாறாக இருக்கிறார். அவருடன் களரி சண்டை போடும் காஜல் அகர்வால் கதாபாத்திரமும் வேற லெவல். அந்த வகையில் இந்தியன் 3 முழுக்க சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு நடந்த போர் காட்சிகள்தான் காட்டப்படும் என தெரிகிறது.

மேலும் பாகம் 2ல் இன்றைய ஊழல், கொள்ளை, பண முதலைகளின் இன்னொரு முகம் என அனைத்தையும் சங்கர் கிழித்து தொங்க விட்டிருக்கிறார். அதேபோன்று சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் எந்த அளவுக்கு நம்மை கொடுமைப்படுத்தினார்கள் என்பதையும் தோலுரிக்க இருக்கிறார்.

ஆக மொத்தம் இந்தியன் 2 சில கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த ட்ரெய்லர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கமல் சொன்னதைப் போல் அடுத்த வருடம் வெளிவர இருக்கும் இப்படம் நிச்சயம் ஸ்கோர் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியன் 3 ட்ரெய்லர்

Trending News