வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உலக நாயகனிடம் காதலால் மயங்கி கிடந்த 6 நடிகைகள்.. மரணப்படுக்கையில் பார்க்க துடித்த ஹீரோயின்

Indian Actresses like kollywood Actor kamal: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை உலக நாயகன் கமல் ஆவார். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக  சினிமாவின் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து ஜாம்பவானாக விளங்கிவரும் இவரின் வாழ்க்கையிலும் தென்றலென நடிகைகள் பலர் கடந்து சென்றுள்ளனர்.

டான்சர் வாணி கணபதி: கமல் “மேல்நாட்டு மருமகள்” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடன கலைஞர் நடிகையான வாணி கணபதியை 1978 இல் திருமணம் செய்து கொண்டார் இருவரும் கருத்து வேறுபாடால் 1988 இல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கமலின் அண்ணன் மகள் சுகாசினி அவர்கள் இவருடன் புகைப்படம் எடுத்து வலைதளத்தில் பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிகா: 80களில் கமலுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டவர் சரிகா இருவரும் திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை இழந்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தங்களின் அன்பு குழந்தைகள் ஸ்ருதி மற்றும் அக்ஷராக்காக திருமணம் செய்து கொண்டனர். பின்பு கருத்து வேறுபாட்டால் 2002ல் விவாகரத்தும் பெற்று விட்டனர் பெரும்பாலான படங்களில் கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராக சரிகா இருந்தது குறிப்பிடத்தக்க செய்தி.

கௌதமி: தேவர் மகன், நம்மவர் படங்களில் இணைந்து நடித்த கமல் மற்றும் கௌதமி காதல் காட்சிகளில் உணர்வுபூர்வமாக ஒன்றி இருந்தனர். கிட்டத்தட்ட கமல் மற்றும் கௌதமி 12 ஆண்டுகள் திருமணம் செய்யாமலேயே நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் தான் சுயமரியாதை இழக்கப்படுவதாகவும் தன் மகளுக்காகவும் கௌதமி கமலை விட்டு விலகினார்.

Also read: ஆளவந்தான் போல அபூர்வ சகோதரர்களும் பிளாப் ஆகிருக்க வேண்டியது.. சாதுரியமாக கமலை தூக்கி விட்ட இயக்குனர்

பூஜா குமார்: 2000 ஆண்டில் வெளிவந்த காதல் ரோஜாவேயில் அறிமுகம் கொடுத்த இந்த ரோஜா, கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உத்தம வில்லன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்.  இந்தியன் 2விற்கு பின்  தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றனர். கமலஹாசனின் குடும்ப விழாவில் வெளிய ஆட்களுக்கு இடம் கொடாத வகையில் பூஜா குமாரை மட்டும் அழைத்திருந்தார்களாம்.

சிம்ரன்: கமலுடன் பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களின் நடித்த போது அடிக்கடி கிசுகிசுக்கப்பட்ட இந்த ஜோடிகள் பொது வழியில் யார் இவர்களைப் பற்றி கேட்டாலும் இல்லை என்று மறுக்க முடியாமல் கோபமாக காரசாரமாக பதில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீவித்யா: தமிழ் சினிமாவுக்கு கேரளத்து வரவான ஸ்ரீவித்யா உடன் 70களில் கமல் பல படங்களில் இணைந்து நடித்தார். கமலை தீவிரமாக காதலித்த ஸ்ரீவித்யா. கமலுக்கு திருமணமான உடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா மரணத் தருவாயில் கமலை பார்க்க ஆசைப்பட்டாராம். இதைக் கேள்விப்பட்டு ஸ்ரீவித்யாவை பார்க்க சென்றாராம். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்று கமலை பார்த்த திருப்தியில் உயிர் விட்டிருக்கிறாராம் ஸ்ரீவித்யா.

Also read: சிவகார்த்திகேயனை நிலைகுலைய வைத்த 3 பிரச்சனைகள்.. நேரம் பார்த்து ஆப்பு வைத்த கமல்

Trending News