Indian celebrities and their maldives tour issue: இந்திய பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் அரசு முறை பயணமாக லட்சத்தீவிற்கு சென்று ரிலாக்ஸ் செய்து அங்கே புகைப்படம் எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுஉள்ளார் அதாவது லட்சத்தீவின் அழகை சித்தரித்ததோடு இதன் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் செய்தார் என்றே கூறலாம். எதற்காக இந்த விளம்பரம்?
இந்தியன் செலபிரிட்டிஸ் பலபேர் தங்கள் விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதின் மூலம் அந்த நாட்டின் சுற்றுலா துறையை பிரபலமாக்குகிறார்கள். சுற்றுலா மூலமாகவே அந்த நாட்டிற்கு முப்பது சதவீதம் வருமானம் கிடைக்கிறது.
இந்தியாவின் மூலம் பல ஆதாயங்களை அடைந்த மாலத்தீவு அரசு தற்போது இந்திய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு மோடியை தவறாக விமர்சித்தது. இதன் பொருட்டே மோடியின் இச்செயல் வைரல் ஆகியது. இச்சர்ச்சையின் பொருட்டு ரன்வீர் சிங் தனது வலைதளத்தில் மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீக்கினார். மாலத்தீவிற்கு வருமானம் ஈட்டி கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் இதோ,
Also read: இந்த ஜென்மத்துல விஷாலுக்கு கல்யாணமே ஆகாது.. எதுக்குமே லாயக்கில்லை பைல்வானின் சாபம்
மாலத்தீவின் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு மாலத்தீவு அரசு இந்திய பிரபலங்களுக்கு அதிகமாக சுற்றுலா பேக்கேஜ் சலுகைகள், உணவு என பலவற்றையும் வாரி கொடுத்து அவர்களை கவர்ந்து இழுத்து உள்ளனர்.
சூர்யா ஜோதிகா, ஆர்யா சாயிஷா, சமந்தா, காஜல் அகர்வால், டாப்ஸி, ஆண்ட்ரியா விஷ்ணு விஷால், ரகுல் ப்ரீத்தி சிங், பூஜா ஹெட் டே, ரன்வீர் சிங் என மாலத்தீவு பயணத்தில் பிரபலங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.
இதை தவிர இன்னும் நிறைய செலிபிரிட்டிஸ் விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, டிடி மற்றும் சீரியல் ஆர்ட்டிஸ்ட் பிரபலங்கள் என பலரும் சென்று புகைப்படங்கள் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர்.
இவர்களை ஓசியில் வரவைத்து தங்க வைத்து குடிக்க வைத்து எல்லாரையும் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு மாலத்தீவிற்கு உலகத்தின் பல இடங்களில் இருந்தும் மக்களை வரவைத்து மேம்படுத்தியது மாலத்தீவு அரசு.
இவ்வாறு மாலத்தீவின் சுற்றுலாத் துறையை இம்ப்ரூ பண்ணதுக்கு புல் சப்போட்டும் இந்தியன் செலிபிரிட்டிஸ் மட்டும்தான். இந்த பச்சை இந்தியர்களுக்கு அக் கரையில் உள்ள பச்சை மட்டுமே தெளிவாக தெரிகிறது. நம் நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கவனிக்க தவறி விடுகின்றனர்.
சினிமாவில் மட்டும் என் நாடு என் தேசம் என நாட்டிற்காக கொடி பிடிக்கும் பிரபலங்கள் நடைமுறையிலும் தனது தாய் நாட்டை கருத்தில் கொண்டு செயல்பட்டால் சரிதான்.