வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

275 கோடி சம்பளம் வாங்கும் விஜய்.. வருமான வரி செலுத்தியதில் எத்தனாவது இடம் தெரியுமா.?

Vijay : ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரபலங்கள் எவ்வளவு வருமான வரி செலுத்துகிறார்கள் என்ற பட்டியலை பிரபல நாளிதழ் வெளியிடும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை வருமான வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி விஜய் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை பார்க்கலாம். இந்திய பிரபலங்களில் முதல் இடத்தில் ஷாருக்கான் இருக்கிறார். அவரது படங்கள் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் ஷாருக்கான் 92 கோடி வருமானம் செலுத்தியுள்ளார்.

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் தான் தளபதி விஜய் உள்ளார். இவர் தளபதி 69 படத்திற்கு 275 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார். மேலும் கடந்த நடப்ப ஆண்டில் 80 கோடி வருமான வரியை விஜய் செல்வதியுள்ளார். அடுத்ததாக மூன்றாவது இடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளார்.

அதிக வருமான வரி கட்டிய இந்திய பிரபலங்கள்

இவர் கிட்டத்தட்ட 75 கோடி வருமான வரியை செலுத்தியுள்ளார். அடுத்ததாக பாலிவுட் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் 71 கோடி வரியை கட்டியிருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். ஆறாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கிறார்.

இவர் 66 கோடி வரியை செலுத்தி இருக்கிறார். கிரிக்கெட் மட்டும் அல்லாமல் நிறைய விளம்பரங்களில் விராட் கோலி நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் 42 கோடி வருமான வரியை கடந்த ஆண்டு செலுத்தி இருக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக எம்எஸ் தோனி 38 கோடி வருமான வரியை செலுத்தி உள்ளார். மேலும் ரன்பீர் கபூர் 36 கோடியும், ரித்திக் ரோஷன் 28 கோடி வருமான வரி செலுத்தியுள்ளனர். ரித்திக் ரோஷன் போல் சச்சின் டெண்டுல்கர் 28 கோடி வரி செலுத்தி இருக்கிறார். பிரபல பத்திரிகை தொகுப்பாளர் கபில் ஷர்மா 26 கோடி வரி செலுத்தி இருக்கிறார்.

Trending News