ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

60+ ரன்கள், நியூசிலாந்து அணியின் தோல்வி.. பெரிய எதிர்பார்ப்பில் இன்றைய போட்டி

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர் தோல்விகளால் இந்திய அணியின் அரைஇறுதி கனவு கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய அணியின் தொடர் தோல்விகளால் வீரர்கள் அனைவரும் துவண்டு போய் உள்ளனர். இந்த தோல்விகளுக்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமான வீரர்கள் பார்ம் கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமின்றி பந்துவீச்சில் சமீபகாலமாக சொதப்பி வருவது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, டாசில் தோல்வி அடைந்தது தான் தோல்விகளுக்கு ஒரு பெரிய உதாரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி அரையிறுதிக்குள் எப்படியெல்லாம் நுழைய முடியும் என்பதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை வென்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் 60+ ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணியும் ஏதாவது ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை பெற முடியும். வரும் போட்டிகளில், இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும் நியூசிலாந்து அணியின் தோல்வியிலேயே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புகள் உள்ளது.

Newzeland-Cinemapettai.jpg
Newzeland-Cinemapettai.jpg

Trending News