ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டா? கடைசியாக மௌனம் கலைத்த கங்குலி. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் நிலவிவரும் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது. இப்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் ரவிசாஸ்திரி. ஏற்கனவே அவரது பயிற்சி காலம் முடிவடைந்த பின்னரும் அதை நீட்டித்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகிற 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. அதன் பின்னரும் அவரே நீட்டிக்கப்படுவார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் அவருடைய பதவி காலத்தில் இந்திய அணி ஒரு முறை கூட ஐசிசியின் கோப்பையை வெல்ல வில்லை என்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ரவி சாஸ்திரிக்கு முன்னதாக அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே ராஜினாமா செய்தார். அதன்பின்னர் பயிற்சியாளராக வந்த ரவி சாஸ்திரியுடன் விராட் கோலிக்கு நல்ல ஒரு புரிதல் இருந்ததால் இன்று வரை பயிற்சியாளராக செயல்பட்டார் சாஸ்திரி.

Virat-Cinemapettai-3.jpg
Virat-Cinemapettai-3.jpg

கோலி மற்றும் சாஸ்திரி இருவருக்கும் உள்ள நெருக்கத்தால் மீண்டும் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக வரவேண்டும் என்ற தமது ஆதரவை விராட் கோலி தெரிவித்தாலும், இதற்கு ரவிசாஸ்திரி உடன்பட மாட்டார் என்று தெரிகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் வயதுவரம்பு 60 மட்டுமே. சாஸ்திரிக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. இதனால் அவர் மீண்டும் பயிற்சியாளர் ஆனாலும், ஒரு வருடம் மட்டுமே இருக்க முடியும். ஆனால் ஏற்கனவே சாஸ்திரி பதவியில் இருந்து விலகவிருப்பதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shastri-Cinemapettai.jpg
Shastri-Cinemapettai.jpg

இந்நிலையில் அடுத்த பயிற்சியாளராக இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் தெரிவித்துள்ளார்.அதில் ராகுல் டிராவிட்டின் விருப்பத்தை நாங்கள் இதுவரை அவரிடம் கேட்கவில்லை. அவருக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அதற்கு ஏற்ற முடிவை எடுக்க முடியும் என கங்குலி கூறியுள்ளார்.

 

Trending News