ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மோசமான வரலாறு.! இந்தியாவிற்கு சிம்மசொப்பனமான ஓவல் மைதானம்.. அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரில் முன்னிலை பெற முடியும். அதனால் இரு அணிகளுமே முழு பலத்துடன் மோத இருக்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள போட்டிகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால் இந்திய அணி சற்று பின்னடைவாக உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 13 முறை மோதியுள்ளது.

அதில் இங்கிலாந்து 5 முறையும், இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியையே சந்தித்துள்ளது.

Oval-Cinemapettai.jpg
Oval-Cinemapettai.jpg

4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பலர் காயத்தினால் அவதிப்படுவதாலும், ஓய்வின்றி விளையாடி கஷ்டப்படுவதாலும் முக்கிய வீரர்கள் பங்கு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு இது சற்று ஆறுதலான விஷயமாக அமைந்துள்ளது.

Trending News