இளம் வயதிலிருந்தே இந்திய அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்கிற கனவோடு பலர் கிரிக்கெட் விளையாட தொடங்குவார்கள். ஆனால் நம் நாட்டில் போட்டி மிக மிக அதிகம். எனவே கிரிக்கெட் விளையாட வரும் இளைஞர்கள் ஒரு சிலர் மட்டுமே சாப்பிடவே இல்ல ஒரு வாரமாஇந்த நியூஸ் எல்லாம் ஓடிக்கிட்டு இருக்குவிளையாடும் வாய்ப்பை பெறுவார்கள் மறுபக்கம் ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு கடைசிவரை இல்லாமலேயே போய்விடும்.
அப்படி இந்திய அணியில் வாய்ப்பு பெற்று, ஆரம்பத்தில் தனது கிரிக்கெட் கேரியரை சிறப்பாக தொடங்கி வருங்கால இந்திய அணியின் தூண்கள் என்று பெயரெடுத்து, பின் அணியை விட்டு காணாமல் நிறைய வீரர்கள் போயுள்ளனர். அப்படி காணாமல் போன கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
தினேஷ் மோங்கியா.
ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் மோங்கியா தற்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.இவர் சிறப்பாக விளையாடிய காலத்தில் 2003ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். ஆனால் 11 போட்டியில் விளையாடிய இவரால் 120 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதன்பின் இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். இறுதியில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தினேஷ் மோங்கியா தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார்.
ராபின் உத்தப்பா.
அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன ராபின் உத்தப்பா தற்போது T20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஒரு காலத்தில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் இவர்தான். 2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டT20 தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் ராபின் உத்தப்பா மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அதன் காரணமாகவே இந்திய அணி அந்த போட்டியை சமன் செய்ய முடிந்தது. பின்னர் உத்தப்பா இந்திய அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை ஒழுங்காக பயன்படுத்த முடியாமல் தவித்தார். இறுதியில் இவர் அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டார்.
யூசுப் பதான்.
இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய வீரர்களில் இவரும் ஒருவர் இவர் ஒரு ஆல்ரவுண்டர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இவருக்கு தொடர்ந்து இந்திய அணியின் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் இவரால் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணிக்காக வழங்க முடியவில்லை. இதன் காரணமாகவே சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இறுதியில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
கருண் நாயர்.
கருண் நாயர் தான் விளையாடிய மூன்றாவது போட்டியிலேயே முச்சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இவர் இச்சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் இந்திய அணியில் சேவாக் மட்டுமே முச்சதம் அடித்துள்ளார்.ஆனால் அதன்பின்னர் கருண் நாயர் டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி படிப்படியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
பார்த்திவ் பட்டேல்.
பார்த்திவ் பட்டேல் தன்னுடைய 17வது வயதிலேயே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். இவர்ஆரம்ப காலகட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, வருங்காலத்தில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக வருவார் என்று அனைவரும் நினைத்தனர். அதன் பின்னர் மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் வருகையால் இவருக்கான வாய்ப்பு படிப்படியாக குறைந்து போனது. தற்போது பட்டேலுக்கு நிரந்தரமாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.