ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பிரபல கிரிக்கெட் வீரரின் 8 வருட திருமண வாழ்க்கை முறிவு.. இரண்டாவது முறையாக விவாகரத்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். முகநூல் மூலம் இருவரும் நண்பர்களாகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆயிஷா முகர்ஜி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார்.

அதன்பின் ஆயிஷா முகர்ஜி மற்றும் ஷிகர் தவான் ,முகநூல் மூலம் தமது காதலை வளர்த்து திருமணம் செய்து கொண்டனர். இப்பொழுது இவர்களது எட்டு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shikhar-Dawan-Cinemapettai.jpg
Shikhar-Dawan-Cinemapettai.jpg

தவானியின் மனைவி ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிகர் வானுக்கும், தனக்கும் விவாகரத்து கிடைத்துள்ளதாக பதிவு வெளியிட்டுள்ளார். இதைப்பற்றி ஷிகர் தவான் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. ஆனால் ஆயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விவாகரத்தை பற்றி மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆயிஷா முகர்ஜி தனது பக்கத்தில் தான் இரண்டு முறை விவாகரத்து பெற்றுள்ளதாகவும், விவாகரத்து என்பது மிகவும் மோசமான வார்த்தை என்றும் சித்தரித்துள்ளார்.

Shikhar1-Cinemapettai.jpg
Shikhar1-Cinemapettai.jpg

Trending News