ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் மோசமாக ஆடிய நிலையிலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.
இந்திய அணியின் இளம் வீரரான ஹனுமா விஹாரி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து கழற்றி விடப் படுவார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் அணியில் இடம் பிடித்தார்.
ஹனுமா விஹாரி பவுலிங் ஆல் ரவுண்டர் என்பதால் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் கடந்த போட்டியில் இவருக்கு பவுலிங் போட வாய்ப்பு வழங்கப்படவில்லை. விஹாரி பேட்டிங்கிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். கே. எல். ராகுல் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் ஹனுமா விஹாரியை நீக்கும் எண்ணத்தை பிசிசிஐ கைவிட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு ஆல்-ரவுண்டராக இருந்தால் ஏதாவது ஒன்றிலாவது தன்னை நிரூபிக்க வேண்டும் என ரசிகர்கள் ஹனுமா விஹாரியை தேர்வு செய்ததற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் .