சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இந்திய வீரர்களுக்கு இடையே இப்படி ஒரு ஒற்றுமையா.. எல்லோரும் மாமா, மச்சான் தான் போல!

நமக்கு படிப்பு ஒழுங்காக வரவில்லை என்றால் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தி முன்னேறப் பார்ப்பது அவசியம். அந்த வகையில் படிப்பு இல்லை என்றால் விளையாட்டு என்ற நோக்கத்தோடு அதில் கவனம் செலுத்தி சாதித்தவர்கள் பலர் உள்ளனர்.

அப்படி ஒரே கல்லூரியில் படித்து, விளையாட்டில் கவனம் செலுத்தி இந்திய அணிக்காக விளையாடி வரும் வீரர்கள்.

கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால்: இவ்விருவரும் ஒன்றாக இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவர்கள். களத்தில் இவர்கள் இருவரைப் பற்றியும் நாம் அறிந்ததே. ஆனால் இவர்களுக்குள் இன்னும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பெங்களூரில் உள்ள ஜெயின் யுனிவர்சிட்டியில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.

Agarwal-Rahul-Cinemapettai.jpg
Agarwal-Rahul-Cinemapettai.jpg

முரளி விஜய் மற்றும் வருன் சக்ரவர்த்தி: தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்விரு இந்திய அணி வீரர்களும் எஸ்ஆர் எம் யூனிவர்சிட்டியில் படித்தவர்களாம். முரளிவிஜய் எக்னாமிக்ஸ் குரூப்பிலும், வருன் சக்ரவர்த்தி ஆர்க்கிடெக்ட் குரூப்பிலும், படித்தார்களாம்.

ரோகித் சர்மா மற்றும் அஜிங்கிய ரஹானே : ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனும், மும்பையில் உள்ள ரிஸ்வி கல்லூரியில் படித்தவர்களாம். அவர்கள் மட்டுமின்றி இந்தக் கல்லூரியில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் படித்துள்ளனர். இந்திய அணிக்காக விளையாடிய வாசிம் ஜாபர் மற்றும் தவால் குல்கர்னி ஆகிய இருவரும் இதே கல்லூரியில் தான் படித்தார்களாம்..

Rohit-Rahane-Cinemapettai.jpg
Rohit-Rahane-Cinemapettai.jpg

கௌதம் காம்பீர் மற்றும் முரளி கார்த்திக்: இந்திய அணியின் ஒரு காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் கௌதம் காம்பீர். ஏதோ தோனியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அணியில் இருந்து நிரந்தரமாக கழற்றி விடப்பட்டார். கௌதம் கம்பீர் மற்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக்கும் டெல்லியிலுள்ள இந்துக் கல்லூரியில் படித்தவர்களாம். முரளி கார்த்திக் சென்னையில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தானாம். இவர்களைப் போன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சபா கரிமும் இதே கல்லூரியில் தான் படித்தாராம்.

Gautham-Karthik-Cinemapettai.jpg
Gautham-Karthik-Cinemapettai.jpg

ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரவிசாஸ்திரி: மும்பையில் உள்ள ஒரு சிறந்த கல்லூரி போதர்.இந்த கல்லூரியில் தான் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யரும்,முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் படித்தார்களாம்.. இவர்களைப் போலவே இதே கல்லூரியில் ரோகன் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் படித்துள்ளனர்.

Shastri-Iyer-Cinemapettai.jpg
Shastri-Iyer-Cinemapettai.jpg

Trending News