16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விளையாட்டு கிரிக்கெட். அது இங்கிலாந்து நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் அது சர்வதேச தரத்திற்கு உயர்ந்தது. 1844ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. அதன்பின் காலத்திற்கு ஏற்ப அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகத்தில் இரண்டாவதாக அதிக பார்வையாளர்களை கொண்ட போட்டி கிரிக்கெட் ஆகும்.
கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்துள்ளனர். அதில் இந்திய வீரர்கள் சந்தித்துள்ள சாதனைகளையும் சோதனைகளையும் இதில் காண்போம்.
இஷாந்த் சர்மா – இந்தியாவிடம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஸ்கோர்களை 3 வீரர்கள் பெற்றுள்ளனர், பிரண்டன் மெக்கல்லம் 302, அலிஸ்டர் குக் 294, மைக்கேல் கிளார்க் 329. இவர்கள் மூவரும் அதிக ஸ்கோர்களை பெற காரணம் இஷாந்த் சர்மா. மூன்று பேரும் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.

பாபு நட்கர்னி – இவர் ஒரு இந்திய ஸ்பின் பவுலர். 1964ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். ௦.15 விகிதத்தில் அமைந்துள்ளது இவருடைய ஓவர்கள்.

சுனில் கவாஸ்கர் – ஒருமுறை இங்கிலாந்து 60 ஓவர்களில் 335 ரன்களை இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 132 ரன்களை மட்டுமே எடுத்தது. அப்போட்டியில் சுனில் கவாஸ்கர் 177 பந்துகளில் 36 ரன்களை மட்டும் எடுத்து இந்திய அணியின் தோல்விக்கு உதவி செய்தார்.

ரோகித் சர்மா மற்றும் சௌரவ் கங்குலி – உலக கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் செஞ்சுரி அடித்த 2 இந்திய வீரர்கள் என்றால் அது ரோஹித் சர்மாவும், சௌரவ் கங்குலி மட்டும்தான். இதனை முதலில் செய்தவர் சவுரவ் கங்குலி, அவர் கென்யாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2003ஆம் ஆண்டு சதம் அடித்தார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு ரோகித் சர்மா வங்கதேசம் அணிக்கு எதிராக சதத்தை பதிவு செய்தார்.

சௌரவ் கங்குலி – தொடர்ந்து 4 முறை மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்யை பெற்றவர் சௌரவ் கங்குலி. அனைத்துமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1997ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

விரேந்தர் சேவாக் – சேவாக்கின் அதிக ஸ்கோர்கள்
119 – 20 ஓவர் போட்டி( ஐ பி எல் )
219 – ஒருநாள் போட்டி.
319 – டெஸ்ட் போட்டி.

மகேந்திர சிங் தோனி – ஆசிய கண்டங்களை தவிர வேறு எந்த அயல்நாட்டு தொடர்களிலும் மகேந்திர சிங் தோனி ,ஒரு நாள் போட்டிகளில் சதத்தினை பதிவு செய்தது இல்லை.

சச்சின் டெண்டுல்கர் – ராஞ்சி போட்டிகளில் டெண்டுல்கர் ஒரே ஒரு முறை மட்டுமே டக் அவுட் ஆகியுள்ளார். அவரது விக்கெட்டை புவனேஷ் குமார் எடுத்துள்ளார்.

விராட் கோலி – விராட் கோலி வருகைக்குப் பின் இந்திய அணி ஐந்து முறை 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த 5 போட்டிகளில் 4 முறை கோலி சதம் அடித்துள்ளார்.
