வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அதிரடியாக தயாராகும் இந்தியன் 3.. சம்பள விஷயத்தில் மோசமா பிளே பண்ண ஏஜென்ட் 

Actor Kamal: விக்ரம் படத்தின் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த கமல் அடுத்ததாக இந்தியன் 2 படத்தின் மூலம் அடுத்த வெற்றிக்காக காத்திருக்கிறார். ஏகப்பட்ட பிரச்சனைகளின் மத்தியில் இந்தியன் 2 படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்து ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கின்றனர். ஆனால் எடுக்கப்பட்ட மொத்த காட்சிகளை ஓட்டிப் பார்த்தால் ரன்னிங் டைம் 5.30 மணி நேரம் ஓடுகிறது.

இதற்கு பல கோடிகளை கொட்டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்ததால் எந்த காட்சியை வெட்டுவது என தெரியாமல் திணறுகின்றனர். இன்னும் 30 நிமிஷத்துக்கான காட்சிகளை மட்டும் எடுத்து விட்டால் பார்ட் 2வை தொடர்ந்து பார்ட் 3யையும் ரிலீஸ் செய்து விடலாம் என்ற முடிவுக்கு இந்தியன் 2 பட குழு வந்துவிட்டது.

இதனால் 30 நிமிஷத்திற்கான படப்பிடிப்பை மட்டும் இப்போது துவங்கப் போகின்றனர். இதில் சங்கருக்கு மட்டும்தான் இரண்டாம் பாகத்தில் கொடுத்த 30  கோடியை மறுபடியும், மூன்றாம் பாகத்திற்கு இன்னும் ஒரு 30 கோடியை சம்பளமாக கொடுத்துள்ளனர். இந்தியன் 3ல் கமல் நடிக்க வேண்டிய அவசியமே இல்லையாம்.

ஏற்கனவே கமல் நடித்திருக்கும் காட்சிகளை வைத்து இடையில் அவர் இல்லாத சீன்களை எடுத்து சொருவி விடலாம் என சங்கர் நினைத்தார். ஆனால் ‘எனக்கு சீன் வையுங்க, அப்பதான் இன்னும் ஒரு பில் போட முடியும்’ என்று கமலஹாசன் சம்பள விஷயத்தில் தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார்.

இவரிடம் இல்லாத காசு பணமா! அப்படி இருக்கும் போது நடிக்கவே தேவையில்லாத இடத்தில் நானும் நடித்து காசு வாங்கிக்கிறேன் என்று பணம் பறிக்க பார்க்கிறார். சினிமாவில் பெரிய நடிகராக இருந்து கொண்டு இப்படியா காசுக்காக படுமோசமாக நடந்து கொள்வது. 

இந்தியன் 3ல் தனக்கும் காட்சி வைத்தே ஆக வேண்டும் என சொல்லி, இன்னொரு சம்பளத்தை வாங்கி விட வேணும்னு இப்படி செஞ்சிருக்கார். கமலுக்கு மட்டுமல்ல வேறு யாருக்குமே இந்தியன் 3-காக தயாரிப்பு நிறுவனம் சம்பளம் கொடுக்கவில்லை. சங்கருக்கு மட்டும் தான் என முடிவெடுத்து விட்டனர், இப்போது கமலும் தனியாக பில் போட்டு விட்டார்.

Trending News