வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கிரிக்கெட்ல பங்காளிகளுக்குள்ளேயே அடிச்சுகிட்ட மொமென்ட்.. ஜடேஜாவும், இஷாந்த் சர்மாவும் காலரைப் பிடித்து போட்ட சண்டை

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டை ஜென்டில்மேன் கேம் என்பார்கள், ஆனால் கோபம் வந்து விட்டால் வெறித்தனமாய் நடந்து கொள்ளும் வீரர்களும் இங்கே இருக்கிறார்கள். அதிலும் விராட் கோலி, கௌதம் கம்பீர், ஹர்பஜன்சிங், போன்ற வீரர்கள் எல்லோரும் எங்கே தான் கோபத்தை வைத்திருப்பார்கள் என்று தெரியாது திடீரென பொங்கி விடுவார்கள்.

மைதானத்தில் விளையாடும் பொழுது எதிரணியுடன் சண்டையிட்டு பார்த்திருக்கிறோம் ஆனால் ஒரே அணியில் வீரர்கள் மோதிக்கொள்வது மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். அப்படி இந்திய அணியில் சில வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவமும் இங்கு அரங்கேரி உள்ளது. பங்காளிகளுக்குள்ளேயே அடிச்சுகிட்ட அந்த சண்டைகளை இங்கே பார்க்கலாம்

ரவி ஜடேஜா – இஷாந்த் சர்மா: 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய ஒரு போட்டியில் இவர்கள் இருவரும் மோதிக்கொண்டனர். பந்து வீசிக்கொண்டிருந்த இஷாந்த் சர்மாவிடம் ஜடேஜா ஏதோ பேச, இரண்டு பேருக்கும் அனல் பறக்கும் விவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். சக வீரர்கள் குறுக்கிட்டு சமாதானம் செய்தனர்.

ஆசிஸ் நெக்ரா – மகேந்திர சிங் தோனி: 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய பௌலர்களை முழு வீச்சில் துவம்சம் செய்து கொண்டிருந்தார் அப்ரிடி. ஆசிஸ் நெக்ரா பந்துவீச்சில் அவர் கொடுத்த எளிதான கேட்சை விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி விட்டு விடுவார். இதனால் நெக்ரா அவரை மைதானத்திலேயே வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டார்.

சுரேஷ் ரெய்னா – ஜடேஜா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2013 இல் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஜடேஜா வீசிய பந்தில் எளிதாக வந்த கேட்சை சுரேஷ் ரெய்னா அலட்சியமாக விட்டு விடுவார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரவீந்திர ஜடேஜா அவரிடம் சண்டையிட்டார். சக வீரர்கள் அனைவரும் வந்து இருவரையும் சமாதானம் செய்தனர்.

Trending News