வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

5 முக்கிய தலைகளின் ஜோலியை முடித்த இந்தியன் 2.. படம் உண்மையிலேயே disaster தான் போல

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சொதப்பலான படமாக அமைந்தது. இந்த படம் திட்டமிட்டதைவிடவும் முன்னதாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தினை இணையவாசிகள் சரமாரியாக ட்ரோல் செய்து வந்தனர்

இப்படி இருக்க, இந்த படத்தை ஒரு சில மூத்த கலைஞர்களுக்காக வேண்டும் என்றால் பார்க்கலாம். ஏன் என்றால் இந்த படத்தில் நடித்த கலைஞர்கள், ஒரு சிலர் வரிசையாக இறைவனடி சேர்ந்துள்ளார்கள்..

நடிகர் விவேக்: நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் இந்தியன் 2. 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்தார். அப்போது இந்தியன் 2 திரைப்படம் ப்ரொடக்ஷனில் இருந்தது. அதனால் பாதி படத்திற்கு மேல் இந்தியன் 2-வில் விவேக் நடிக்கவில்லை. அவருக்கு பதில் வேறொரு நடிகர் டூப் போட்டு நடித்தாலும், அவர் கடைசியாக இந்தியன் 2 படத்தில் தான் கமிட் ஆகியிருந்தார்.

நெடுமுடி வேணு: மலையாள நடிகர் நெடுமுடி வேணு, முக்கிய கதாபாத்திரத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருப்பார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் 500க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் 3 தேசிய விருதுகளையும், 6 கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் இந்தியன் 2.

மாரிமுத்து: நடிகர் மாரிமுத்துவின் கடைசி படமும் இந்தியன் 2 படம் தான். பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, சன் டிவியில் ஆதி குணசேகரனாக நடித்த பின்னர் தான் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது அசாதாரண நடிப்பால், தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அப்படி விக்ரம் படத்தை தொடர்ந்து, கமலின் அடுத்த படமான இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட இறந்து போனார்.

மனோபாலா: குணச்சித்திர நடிகர் மனோபாலா இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இதுவே அவருக்கும் கடைசி படம். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 69 வயதிருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டு காலமானார்.

டெல்லி கணேஷ்: இப்படி இருக்க, சமீபத்தில் டெல்லி கணேஷ் இழப்பும், சினிமாத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பு காரணமாக உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்து போனார். கடைசியாக அவர் நடித்த படமும் இந்தியன் 2 தான்.

இப்படி இந்தியன் 2 படத்தில் நடித்தவர்கள் அடுத்தடுத்து இறந்து போனது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியதிகோடு, ஒரு சிலர் இதை தவறான முறையில் விமர்சித்தும் வருகின்றனர். அப்படி ஒருவர், “ஒரு படம் இத்தனை பேரை காவு வாங்கியுள்ளதா? உண்மையில் இந்தியன் 2 படம் disaster தான் போல…” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News