சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பீஃப் மட்டுமில்லை அதையும் ஒரு கை பார்த்த இந்திய வீரர்கள்.. அடப்பாவிகளா! இதை சாப்பிடறதுக்கு தான் கடல் கடந்து போனீங்களா.?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.

தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 7-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில், ரோகித் சர்மா, நவ்தீப் சைனி மற்றும் பிரதியூ ஷா ஆகியோர் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறி, புத்தாண்டு அன்று மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதிக்கு சென்று உணவு உட்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவர்கள் ஐந்து வீரர்கள் பயோ பபுள் விதிகளை மீறி உணவகத்திற்கு சென்று உணவு உட்கொண்டதால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரும் அந்த உணவகத்தில் என்னென்ன உணவுகள் சாப்பிட்டார்கள் என்பது இப்போது வைரலாகி வருகிறது.

rohit-biobubble-issue
rohit-biobubble-issue

கோழி இறைச்சி, பிஎஃப் மட்டுமின்றி சில இறால் வகை உணவுகளையும் அதனோடு சேர்த்து பன்றி இறைச்சியையும் ஒரு கை பார்த்துள்ளனர். அவர்கள் சாப்பிட்ட பில்லை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

Indianfood-Bill-Cinemapettai.jpg
Indianfood-Bill-Cinemapettai.jpg

Trending News