வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடேங்கப்பா! விஷாலுக்கு 46 வயசு ஆயிடுச்சா.. முரட்டு சிங்கிளின் சொத்து மதிப்பு விவரம்

Actor Vishal: எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வரும் விஷால் இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இத்தனை வயதிலும் முரட்டு சிங்கிளாக இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றி வருவது சில விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் விஷால் தன் போக்கில் ஜாலியாகத் தான் இருக்கிறார்.

தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வரும் இவருடைய சொத்து மதிப்பு விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அடேங்கப்பா விஷாலுக்கு 46 வயசு ஆயிடுச்சா என்று பலரும் வியக்கும் சூழலில் இவருடைய சொத்து மதிப்பு வாயை பிளக்க வைத்துள்ளது.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் அக்கட தேசம் சென்ற காந்த கண்ணழகி.. வெளிப்படையாக பேசிய விஷால் பட நடிகை

அந்த வகையில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷால் இப்போது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். அதன்படி தற்போது அவர் ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி வருடத்திற்கு இவர் 25 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஷால் இதுவரை 120 கோடி சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். மேலும் இவருக்கு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சொந்தமாக வீடும் இருக்கிறது.

Also read: விஷால் என்னைய பரதேசினு தான் கூப்பிடுவாரு.. வெளிப்படையாக பேசிய வைரல் நடிகை

இன்னும் பிற பகுதிகளிலும் இவர் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி போட்டிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் கார் மீது அதிக ஆசை கொண்ட விஷாலிடம் ரக ரகமான விலை உயர்ந்த பல கார்கள் இருக்கிறது. அதன் மதிப்பு சில கோடிகளை தாண்டும். அந்த வகையில் பிஎம்டபிள்யூ, ஜாகுவார் போன்ற பல லேட்டஸ்ட் மாடல் கார்களை விஷால் வைத்திருக்கிறார்.

ஆனாலும் 4 கோடி மதிப்பிலான மார்ட்டின் காரை வாங்க வேண்டும் என்பதுதான் அவருடைய நெடுநாள் ஆசையாக இருக்கிறதாம். விரைவில் அதை வாங்கி காட்டுகிறேன் என்று இந்த முரட்டு சிங்கிள் தற்போது சபதம் போடாத குறையாக சுற்றி வருகிறார். இவ்வாறாக இன்று 46வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கும் விஷாலுக்கு எங்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Also read: திரும்பவும் அனகோண்டாவை வைத்து கல்லா கட்ட நினைக்கும் விஷால்.. மார்க் ஆண்டனிக்கு சத்தமாய் ஊதிய சங்கு

Trending News