திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. அசுர வேகத்தில் முந்தி அடிக்கும் இனியா சீரியல்

சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் எந்த சீரியல் ஆனது அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, என்பது அந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் தெரிந்துவிடும். தற்பொழுது எந்த சீரியல்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்து டாப் 10 டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது என்பதை கீழே காணலாம்.

இதில் 10-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 9-வது இடத்தில் ஈரமான ரோஜாவே 2 சீரியலும், 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 7-வது இடத்தில் மிஸ்டர் மனைவி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி: இந்த சீரியலில் ராதிகாவை திருமணம் செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற முடிவை எடுத்த கோபி தற்பொழுது அதால பாதாளத்திற்கு சென்றுவிட்டார். மிகவும் பரபரப்பான கட்டத்தில் அனைத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாகவே பாக்கியலட்சுமி சீரியல் மாறி வருகிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் ஆனது 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: அனாதையாக சுற்றி திரிய போகும் கோபி.. ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் ஆதிராவின் திருமணத்தை பகடைக்காயாக பயன்படுத்தி குணசேகரன் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறார். மேலும் குணசேகரன் மட்டுமல்லாமல் அப்பத்தா, எஸ் கே ஆர் இன் தம்பி என ஒவ்வொருவரும் ஆதிராவின் திருமணத்தை வைத்து பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் ஆனது 5-வது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் கார்த்திக் செய்யும் தில்லு முல்லு வேலைகளானது எப்பொழுது அணுவிற்கு தெரியவரும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த சீரியல் ஆனது நகர்த்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க சுந்தரியின் அம்மா கார்த்திக் பற்றிய உண்மையை எப்பொழுது முருகனிடம் சொல்ல வேண்டும் என்ற முனைப்பிலேயே இருந்து வருகிறார். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சுந்தரி சீரியல் ஆனது 4-வது இடத்தில் உள்ளது.

இனியா: விக்ரமிற்கு எதிராக பல்வேறு எதிர்மறையான திருப்பங்களுடன் திகழ்ந்து வரும் இந்த சீரியல் பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் சீரியல் துவங்கப்பட்ட வெகு சீக்கிரமே சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து அசுர வேகத்தில் முன்னேறி டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

வானத்தைப்போல: இந்த சீரியலில் வெற்றியின் அராஜகத்தில் இருந்து துளசி விடுபட்ட நிலையிலும், அதிலிருந்து முழுமையாக வெளிவர முடியாமல் தவித்து வருகிறார். அதிலும் பல்வேறு மர்மங்கள் நிறைந்த எதிர்பார்ப்போடு இந்த சீரியலானது அமைந்துள்ளது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் வானத்தைப்போல சீரியல் ஆனது 2-வது இடத்தில் உள்ளது.

கயல்: இந்த சீரியலில் குடும்பமே சேர்ந்து எப்படியாவது கயலின் பிறந்தநாளை நல்ல முறையில் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அதற்கு எதிர் மாறாக பல்வேறு பிரச்சனைகளுடன் கூடிய பரபரப்பான கட்டத்தில் இந்த சீரியலானது சென்று கொண்டிருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் கயல் சீரியல் ஆனது முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: குணசேகரனுக்கும் கதிருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. உங்களால் எதையுமே பிடுங்க முடியாது என்று சொல்லிய தம்பி

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 6 இடத்தில் விஜய் டிவியும் இடம் பிடித்துள்ளது. அதிலும் சன் டிவிக்கு எதிராக விஜய் டிவி சீரியல்களும் போட்டி போடத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வந்த வேகத்திலேயே பரபரப்பான கட்டங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இனியா சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாகவே இருந்து வருகிறது. அதிலும் மற்ற சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதத்தில் 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News