ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கோபி மண்டையில் உறைக்கும்படி உருப்படியாக பேசிய இனியா.. பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக பேசி அப்பாவை திருத்தும் மகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா கோபிக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் இனியாவின் உணர்வுகள் என்ன என்பதை இப்போதுதான் புரிந்து இருக்கிறது. எதற்காக கோபிக்கு இப்படி சப்போர்ட் பண்ணி வருகிறார் என்ற இனியாவின் பக்கம் இருக்கும் நியாயமும் புரிகிறது. அந்த வகையில் பாக்கியா மற்றும் கோபி சண்டை போட்டு பிரிந்திருப்பதால் அதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது இனியா தான்.

தன்னுடைய குடும்பத்தை பழையபடி சந்தோசமாக பார்க்க வேண்டும் என்று ஏக்கத்துடன் இருக்கும் இனியா, ராதிகாவை பார்த்து நீங்கள் வந்ததற்கு பிறகுதான் எங்களுடைய நிம்மதியே போய்விட்டது என்று கூறிவிட்டார். இதை தெரிந்த கோபி, இனியாவின் மனநிலைமையை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று தனியாக கூப்பிட்டு போய் இருக்கிறார்.

அப்படி இனியா, கோபியிடம் மனம் விட்டு பேசும் பொழுது தன் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் சொல்லும் விதமாக கோபி மண்டைக்கு புரியும் படி உருப்படியான விஷயங்களை பேசி இன்று அனைவரது கைதட்டிலையும் இனியா பெற்றுவிட்டார். நீங்கள் தான் அம்மாவின் ஹோட்டலில் கலப்படத்தை பண்ணினேன் என்று தெரியும். ஏன் அப்படி பண்ணினீங்க, என் அப்பா தான் எனக்கு ரோல் மாடல் என்று பெருமையாக நான் சொல்லி இருந்தேன்.

அப்படித்தான் நீங்களும் நம் வீட்டில் இருக்கும் பொழுது இருந்தீங்க, என்னுடைய பிரண்ட்ஸ் அப்பா அனைவரும் பொறுப்பில்லாமல் இருப்பதை நினைத்து அவங்க பீல் பண்ணும் போது நான் உங்களை கௌரவமாக நினைத்து பெருமையாக நினைத்தேன். ஆனால் இப்பொழுது என்னுடைய நிலைமை எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு யாரும் தெரியவில்லை.

அதை புரிந்து கொள்ளவும் மனநிலையில் நீங்கள் இல்லை, உங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்றால் உங்களைப் பார்த்து பேச முடியவில்லை. அம்மாவிடம் பேச போனால் அதற்கு அம்மாவுக்கும் டைம் இல்லை. இப்படி பல விஷயங்களை சொல்லி கோபி மனசை மட்டும் இல்லாமல் பார்ப்பவர்களின் இதயத்தையும் கலங்கடிக்க வைத்து விட்டார் இனியா.

இத்தனை நாளாக இனியாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் திட்டிக் கொண்டிருந்த மக்கள் இன்று இனியா பேசினது தான் சரி என்று சொல்லும் அளவிற்கு கச்சிதமாக பேசி விட்டார். அத்துடன் கோபியின் குற்ற உணர்ச்சியும் வெளி வருகிறது. நாம் தவறு பண்ணிவிட்டோம் என்று பீல் பண்ணும் அளவிற்கு கோபி வருத்தம் அடைகிறார். இதனை தொடர்ந்து நிச்சயம் கோபியின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் வரப்போகிறது. யாராலும் திருத்த முடியாத கோபியை இனியா சொன்ன வார்த்தைகள் மூலம் மகளுக்காக திருந்த போகிறார்.

Trending News