வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லெட்டர் எழுதி வைத்த இனியா, எடுத்த விபரீதம்.. ஒட்டுமொத்தமாக நிலை குலைந்து போகும் பாக்யாவின் குடும்பம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வீட்டில் நடந்த அவமானத்தையும் அப்பா அம்மா மொத்தமாக நம்மளை வெறுத்து விட்டார்கள் என்ற துக்கத்தையும் ராதிகாவிடம் வந்து புலம்பினார். அதற்கு ராதிகா சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்லாமல், இது உங்களுக்கு தேவைதான். அவர்கள் வராதே என்று சொல்லியும் ஏன் தேவை இல்லாமல் அங்கு போய் நின்னு அவமானப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.

உங்களால் நானும் என் குடும்பமும் சந்தோஷத்தை இழந்து தவிக்கிறோம். உங்களை கல்யாணம் பண்ணது தான் நான் பெரிய தப்பு என்று கோபியை திட்டும் அளவிற்கு ராதிகா பேசி விடுகிறார். உடனே கோபி, தயவு செய்து கொஞ்சம் நிறுத்து என்னை தனியாக விடு என்று விரக்தியில் பேசி ரெஸ்டாரண்டுக்கு போகிறார். அங்கே நடந்த விஷயங்களை யோசித்துப் பார்த்து தனிமையில் இருந்த கோபிக்கு ஆறுதலாக நண்பர் போய் அட்வைஸ் கொடுக்கிறார்.

விபரீத முடிவை எடுத்த இனியா

அதன்படி நண்பரிடம் கோபி என்னுடைய அம்மாவே என்னை வெறுத்து விட்டார். அதிலும் என் பிள்ளைகள் யாரும் என் பக்கம் வந்து நிற்கவில்லை. யார் வேண்டுமென்று போனேனோ அவளை என்னை இப்பொழுது திட்டுகிறார். எனக்கு இந்த வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது என்று புலம்புகிறார். பிறகு நண்பர் கோபிக்கு கொடுத்த அட்வைஸ் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் பிசினஸை கோட்டை விட்டு விடாதே, அதனால் அதில் கவனமாக இரு என்று சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து இனியாவை காலேஜில் போய் கூட்டிட்டு ஈஸ்வரி மற்றும் தாத்தா வீட்டிற்கு வருகிறார்கள். வந்ததும் இருவரும் ரொம்பவே களைப்பாக இருப்பது போல் பேசிக்கொள்கிறார்கள். அத்துடன் ஈஸ்வரிக்கு கால் வலி இருப்பதால் பாக்கியா மருந்து தேய்த்து பிடித்து விடுகிறார். இப்படி இவர்கள் இருவரும் சோர்வாக இருப்பதை பார்த்து இனியா வேதனைப்படுகிறார்.

அத்துடன் பாக்கியா, இனியாவுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக தாத்தா பாட்டி இருவரும் இந்த குடும்பத்திற்காக எவ்வளவோ பண்ணி விட்டார்கள். தற்போது அவர்கள் ரெஸ்ட் எடுக்கும் இந்த நேரத்தில் இப்படி அலைஞ்சிட்டு வருவது ரொம்பவே வேதனையாக இருக்கிறது. இனியாவது நீ எப்படி இருக்கணும் என்று தெரிந்து அதன்படி நடந்து கொள் என்று சொல்கிறார்.

அடுத்து பாக்யா மற்றும் இனியா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று இனியாவிற்கு பப்பில் நடந்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. அத்துடன் போலீஸ் கையை பிடித்து கூட்டிட்டு போன விஷயங்கள் ராதிகா பேசியது, பாக்யா திட்டி அடித்தது, கல்லூரியின் முதல்வர் TC கொடுத்த விஷயங்கள் அனைத்தையும் நினைத்து பார்த்து அழுகிறார்.

பிறகு அம்மாவுக்கு தெரிந்து விடக்கூடாது என்று பாத்ரூமுக்கு போய் அழுது கஷ்டப்படுகிறார். இதனைத் தொடர்ந்து இனியும் இந்த உலகத்தில் நாம் இருக்க முடியாது. இந்த உலகத்தை விட்டு போகலாம் என்று முடிவு எடுத்து பாக்கியவிடம் சாரி சொல்கிறார். அதன்படி விபரீத முடிவை எடுக்கும் விதமாக வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு லெட்டர் எழுதிக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இனியா ஒரு தவறான செயலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இனியா எடுக்கும் விபரீதம் பாக்யாவின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நிம்மதி இல்லாமல் போகப் போகிறது. இதில் இனியா எடுத்த முடிவு கோபி பாக்கியாவிற்கு பெரிய துக்கத்தை கொடுக்கப் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News