ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 4 பிக்பாஸ் சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஐந்தாவது சீசனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.,
நடந்த முடிந்த 4 சீசன்களில் கடந்து சீசன் தவிர மற்ற மூன்று சீசன்களும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த சீசனில் பார்த்து பார்த்து சலித்த விஜய் டிவி முகங்களை உள்ளே அனுப்பி பார்வையாளர்களை சலிப்படைய வைத்து விட்டனர்.
ஆனால் இந்த முறை 80 சதவீத போட்டியாளர்கள் வெளியில் இருந்துதான் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் விஜய் டிவி நிறுவனம். அந்த வகையில் சினிமா நடிகர்கள் முதல் யூடியூப் பிரபலங்கள் வரை அனைவருக்கும் கொக்கி போட்டு வருகின்றனர்.
அதில் தற்போது யூடியூபில் பிரபலமாக வலம் வரும் இனியன் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இனியன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யூடியுப் பிரபலங்கள் மட்டுமில்லாமல் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் பல இளம் நடிகர்களையும் மண்டையை கழுவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் புகுத்த ஏகப்பட்ட வேலைகள் நடந்து வருகிறதாம்.
கடந்த சீசனில் ஏகப்பட்ட பாடங்களை கற்றுக் கொண்ட விஜய் டிவியில சீசன்களில் கண்டிப்பாக சரியான என்டர்டைமண்ட் போட்டியாளர்களை களமிறக்கி கடந்த சீசனுக்கும் சேர்த்து இரட்டிப்பு கொண்டாட்டத்தை கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.