பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கிட்டத்தட்ட 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரசிகர்களின் பேராதரவுடன் ஒவ்வொரு வாரமும் முதல் ஆளாக காப்பாற்றப்படுகிறார் அரசியல்வாதி மற்றும் பத்திரிகையாளராக இருக்கும் விக்ரமன். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.
இந்த சூழலில் எப்போதுமே தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுத்து வருகிறார். மேலும் மனித கழிவை மனிதனே அகற்றும் நிலை இங்கு தான் உள்ளது என்பதை ஒரு டாஸ்க்கில் எல்லோருக்கும் விக்ரமன் புரிய வைத்திருந்தார். இந்நிலையில் லெட்டர் எழுதும் டாஸ்க் வைக்கப்பட்டது.
Also Read : பிக் பாஸ் வரலாற்றிலேயே 4 முறையும் கேப்டனான மார்க்கண்டேயன்.. சினேகன், யாஷிகா சாதனை முறியடிக்கப்பட்டது
அதில் விக்ரமன் அம்பேத்கர் பற்றி எழுதி இருந்தார். மற்ற ஹவுஸ் மேட்ஸ் லெட்டரை ஒளிபரப்பு செய்த விஜய் டிவி விக்ரமன் படிக்கும் காட்சியை கட் செய்து விட்டது. அதேபோல் மாணவனாக நடிக்கும்போது விக்ரமன் பழங்குடி மக்களுக்காக ஒரு ஓவியம் வரைந்து கதை சொல்லி இருந்தார். அதுவும் விஜய் டிவியில் ஒரு மணி நேர ஷோவில் ஒளிபரப்பவில்லை.
இதனால் பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இணையத்தில் ஹேஷ் டேக் ட்ரெண்டானது. மேலும் விஜய் டிவிக்கு எதிராகவும், விக்ரமனுக்கு ஆதரவாகவும் பலரும் டுவிட் செய்து வந்தார்கள். இதன் விளைவாக நேற்றைய எபிசோடில் விக்ரமன் லெட்டரை வாசிக்கும் கிளிப்ஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Also Read : ஏற்கனவே டிஆர்பி மண்ணை கவ்விடுச்சே.. இதுல கண்டெண்ட் கொடுக்கும் பஜாரியை கழட்டி விடும் பிக் பாஸ்
இதில் மக்களுக்காக அம்பேத்கர் செய்ததில் குறைந்தது ஒரு 5% நான் போராடுவேன் என்று விக்ரமன் எழுதி இருந்தார். மக்கள் விக்கிரமனுக்காக குரல் எழுப்பிய பிறகுதான் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. எப்போதுமே அநீதி வீழும் அறம் வெல்லும் என்பது இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
மேலும் இந்த வெற்றியை விக்ரமன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். போராடினால் எதையும் வெல்லலாம் என்பது இதன் மூலம் விக்ரமன் உணர்த்தி உள்ளார். தொடர்ந்து விக்ரமனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ரசிகர்களை பூரிக்கும் விதமாக உள்ளது. கண்டிப்பாக பைனல் லிஸ்டில் விக்ரமன் இடம்பெறுவார் என்பது எந்த சந்தேகமும் இல்லை.
Also Read : முன்கூட்டியே நடத்தப்படும் பிக் பாஸ் எலிமினேஷன்.. அடுத்த சவாலுக்கு அவசர அவசரமாக கிளம்பும் ஆண்டவர்