சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

போடி வாடின்னு சொன்னா செருப்பால அடிப்பேன்.. பிக்பாஸ் கேப்டனை அவமானப்படுத்திய போட்டியாளர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது சென்ற வாரம் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடி சண்டைக்காட்சிகள்அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் நேற்று பிக் பாஸ் சீசன் 5 இன் முதல் கேப்டன் மற்றும் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டின் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக, ‘ராஜாவுக்கு ராஜா நான் தான்’ என்ற போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு பெரிய பலூன் கொடுக்கப்பட்டு அதை கடைசிவரை யார் உடைக்காமல் பார்த்து கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கிடையில் இரண்டு ஊசிகள் வைக்கப்பட்டிருக்கும் அலாரம் மணி அடித்தவுடன் அதை யார் முதலில் எடுத்து மற்றவர்கள் பலூனை உடைத்தால் அவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். இவ்வாறு கடைசி வரை போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தவர் நிரூப்.

ஆனால் கடைசி சுற்றில் சின்னப்பொண்ணு மற்றும் தாமரை இருவர்தான் பலூனை பத்திரமாக வைத்திருந்தனர். அதன் பிறகு நாட்டுப்புறப் பாடலா? நாடகமா? என்ற போட்டி நிலவியபோது சின்னப்பொண்ணு தன்னுடைய பலூனை தானே உடைத்துக்கொண்டு தாமரைக்கு பிக்பாஸ் வீட்டில் தலைவராகும் வாய்ப்பை கொடுத்துவிட்டார்.

எனவே பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தாமரை செய்தி என்பதால் இந்த வாரத்தின் எலிமினேஷனிருந்து தப்பித்துவிட்டார். அதன் பிறகு நடந்த நாமினேஷன் ப்ராசஸின் போது தாமரைச்செல்வி மதுமிதாவை தேர்வுசெய்தார்.

அதற்கு அவர் கூறிய காரணம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் தாமரை மதுமிதாவிடம். ‘நீ என்னை போடி வாடி என்று சொல்லலாம். அப்படித்தான் என்னை எங்கள் வீட்டில் கூப்பிடுவார்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு மதுமிதா, ‘போடி வாடி என்று சொன்னால் செருப்பால் அடிக்கணும்’ என்று பதில் அளித்ததும் தாமரைச்செல்வி மிகுந்த வருத்தம் அடைந்ததால் மதுமிதாவை நோமினேஷன் செய்வதாக விளக்கமளித்தார்.

madumitha
madumitha

Trending News