ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

அந்த மனசு தான் கடவுள்.. 2020 ஒலிம்பிக் போட்டியில் அனைவரது மனதையும் கவர்ந்த அந்த ஒரு தருணம்.!

டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி இறுதிச்சுற்று நடைபெற்றது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற போட்டியில் கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள்.

Olympics-2020-Cinemapettai.jpg
Olympics-2020-Cinemapettai.jpg

இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரி கால்களில் அடிபட்டது. அதனால் வலி காரணமாக டம்பேரி பின்வாங்குவதாக அறிவித்தார்.

அதன் பின்னர் கத்தார் வீரர் பாஷிம் செய்த செயல்தான் அனைவரின் மனதையும் கவர்ந்தது. அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் நடுவர்களிடம் சென்று “நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்? ” என்று கேட்க ” இருவருக்கும் பகிர்ந்தளிப்போம் ” என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார்.

Highjump-cinemapettai.jpg
Highjump-cinemapettai.jpg

எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து தன் ஸ்போர்ட்ஸ்மேன்சிப்பை நிரூபித்தார் கத்தார் வீரர் பாஷிம்.

Sharing-Cinemapettai.jpg
Sharing-Cinemapettai.jpg

இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் கத்தார் வீரர் பாஷிம் செய்த செயல் மிக அற்புதமான தருணமாக அமைந்தது.

- Advertisement -spot_img

Trending News