இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை யாராலும் மறக்க முடியாது. மிகவும் பொறுமைசாலி, களத்தில் நின்று ஆடக் கூடியவர், இந்திய அணிக்காக அயல் நாட்டில் பல டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுத்தவர்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டிராவிட் தற்போது 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். சச்சின் விளையாடிய காலத்தில் இவர் விளையாடியதால் இவரின் திறமை அவ்வளவாக வெளிவரவில்லை. ராகுல் டிராவிட்டை பற்றி அறியாத பல செய்திகளை இதில் காண்போம்,
ராகுல் டிராவிட் அறிமுகமான போட்டியிலே ஓய்வும் பெற்றுள்ளார். அறிமுகமான முதல் 20 ஓவர் போட்டியிலே ஓய்வையும் அறிவித்துள்ளார். Jammy, Mr:Defendable,The wall போன்ற பெயர்கள் இவருக்கு உண்டு.
இவரின் அப்பா, ஜம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் அந்த விளம்பரத்தில் இவர் நடித்ததாலும் இவருக்கு “Jammy” என்ற பெயர் வந்தது. 2005 ஆம் ஆண்டு செக்ஸியஸ்ட் கிரிக்கெட்டர் என்ற பெயரை பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கையும், சானியா மிர்சாவையும் பின்னுக்குத் தள்ளி இவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.
டிராவிட் தொடர்ந்து நான்கு இன்னிங்சிலும் சதம் அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 31,258 பந்துகளை சந்தித்துள்ளார். இதுவரை எந்த ஒரு வீரராலும் இந்த சாதனையை நெருங்க முடியவில்லை.
இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். அவரின் ஜெர்சி நம்பர் 19. அவர் மனைவியின் பிறந்த தேதியாம். பெங்களூரில் இவர் பெயரில் “jammy cup: என்ற ஸ்கூல் வடிவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் போட்டிகளில் 11 “மேன் ஆப் தி மேட்ச்” அவார்டுகளை வென்றுள்ளார். அதில் 8 அவார்டுகள் வெளிநாட்டில். கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக சதம் விளாசிய ஒரே வீரர் ராகுல் டிராவிட்.
15,17,19 என அனைத்து வயதுக்குட்பட்டோர் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியவர். கிரிக்கெட்டிற்கு முன்னர் ராகுல் டிராவிட் ஹாக்கி போட்டிகளையே விரும்பி விளையாடி வந்தாராம்.