இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதாசாகேப் பால்கே விருது ஆகும். இந்த விருது இந்திய சினிமாவிற்கு தாதா சாகேப் பால்கே அளித்த பங்களிப்பை நினைவுகூறும் வகையில் இந்திய அரசால் 1969ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை வருடா வருடம் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட திரைப்பட விழா இயக்குநகரம் வழங்கிவருகிறது. மேலும் இந்த விருதினைப் பெறும் நபர்களை இந்திய திரைப்படத் துறையை சார்ந்த பிரபலங்களை உள்ளடக்கிய ஒரு குழு தேர்ந்தெடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழில் சிறந்த படம், நடிகர், பன்முகத் தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது, சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் ஆகியோருக்கான விருது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழில் தாதாசாகேப் பால்கே சர்வதேச விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டோரின் விபரம் இதோ:
- சிறந்த படம் – டூ லெட்
- சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
- பன்முகத் தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது – அஜித் குமார்
- சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
- சிறந்த இயக்குனர் – பார்த்திபன் (ஒத்த செருப்பு)
- சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் ரவிச்சந்தர்
இந்த விருது வழங்கும் விழாவில் தல அஜித் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். மிக உயரிய விருது என்பதால் கெத்தாக தல அஜித் கலந்து கொள்வார். மிக எனவே, சர்வதேச விருது பெற உள்ள இந்த நடிகர்களுக்கு தற்போது சமூக வலைதளம் வாயிலாக பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.