வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சர்வதேச அளவில் பெருமைப்படுத்திய இயக்குனர்.. விஜய் சேதுபதிக்கு போட்ட எண்ட் கார்டு

வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தில் வாத்தியாராக மிரட்டிய விஜய் சேதுபதி அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகிலும் பிசியான நடிகராக மாறி இருக்கும் இவருக்கு இயக்குனர் ஒருவர் தற்போது எண்ட் கார்டு போட்டு இருக்கிறார்.

அதாவது சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த மாமனிதன் திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவை சர்வதேச அளவில் பெருமைப்படுத்தி இருக்கிறது. பல ஜாம்பவான்களின் பாராட்டுகளையும் பெற்ற இப்படம் இப்போது ரஷ்யாவின் மாஸ்கோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட இருக்கிறது.

Also read: 50வது படத்தை தந்திரமாக லாக் செய்த விஜய் சேதுபதி.. தூக்கி விட்ட இயக்குனரை கழட்டிவிட்ட சோகம்

இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் சீனு ராமசாமி இனி விஜய் சேதுபதியுடன் இணைய மாட்டேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் இப்போது மிகப்பெரிய நடிகன் ஆகிவிட்டார். பாலிவுட்டிலும் அவர் தன் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து ரஷ்ய படங்களிலும் அவர் நடிப்பார்.

அதையடுத்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற அனைத்து வெளிநாட்டு படங்களிலும் நடிக்கக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அவர் நினைத்தால் உலக அரங்கில் தமிழ் சினிமாவையும், தமிழையும் கொண்டு சேர்த்து விட முடியும். அந்த வகையில் அவருடன் நான்கு படங்களில் பணியாற்றியதை குறித்து நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Also read: விஜய் சேதுபதியை ஓரம் கட்டு வந்த 800 பட ஹீரோ.. முத்தையா முரளிதரனாக நடிக்கவிருக்கும் ஆஸ்கார் பட நடிகர்

மேலும் இனிமேல் அவருடன் என்னால் இணைய முடியாது என்று கூறி அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளார். அதற்கு அவர் கூறிய காரணமும் ஏற்றுக் கொள்ளும் படியாகவே இருக்கிறது. அதாவது விஜய் சேதுபதி தற்போது நிற்கக் கூட நேரம் இல்லாமல் ரெக்கை கட்டி பறந்து வருவது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே தமிழ் சினிமாவை அவர் மறந்துவிட்டார் என்று கூட பலரும் கூறி வருகின்றனர்.

அதைக் குறிப்பிட்டு பேசிய சீனு ராமசாமி, நான் விஜய் சேதுபதியை நெருங்க வேண்டும் என்றால் அதற்கு ஐந்து வருடங்களாவது ஆகும். அந்த அளவுக்கு அவர் பிசியாக இருக்கிறார். அதனால் இனிமேல் அவருடன் இணைந்து படம் பண்ணுவது என்பது முடியாத காரியம் என்று வருத்தத்தோடு கூறி இருக்கிறார். இதற்கு விஜய் சேதுபதி என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதை தான் பலரும் ஆர்வத்துடன் உற்று நோக்கி வருகின்றனர்.

Also read: லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்த 2 டான்ஸ் மாஸ்டர்கள்.. கடைசியில் விஜய் சேதுபதியிடம் தஞ்சம் அடைந்த இயக்குனர்

Trending News