தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடியார் தனது கட்சியான அதிமுகவின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததோடு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி தொடர வழி வகுக்கும் என்று கூறியுள்ளாராம்.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்தவகையில் செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு முதல்வர் அளித்துள்ள பதில்கள் இதோ:
1. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்ட வருகின்றனவா?
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கும் அரசுற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
2. இட ஒதுக்கீடு கொடுக்க வாய்ப்பு உள்ளதா?
எந்த சூழ்நிலையில் எதை செய்யவேண்டும் என தோன்றுகிறதோ, அதை அந்த சூழ்நிலையில் அதற்கேற்றாற்போல் அரசாங்கம் செய்யும். அதுமட்டுமில்லாமல், நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை உறுதி ஆகியுள்ளனர். அமமுக கட்சி கிடையாது. அதிமுக வேறு., அமமுக வேறு. அமமுகவில் இருப்பவர்கள் விலகி, அதிமுகவில் சேர விரும்பினால் தலைமை முடிவு செய்யும்.
3. திமுக பொது எதிரி சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இது அவருடைய கருத்து. இதற்கு நான் எப்படி கருத்து சொல்ல முடியும்.
4. சசிகலாவை குறித்து பேசுவதில்லை என்று கூறுகிறார்களே. ஏன்?
கட்சியில் இல்லாதவர்களை குறித்து ஏன் பேச வேண்டும். டிடிவி தினகரன் எங்கள் கட்சியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் பிரித்து, ஆட்சியை கவிழ்க்க நினைத்தார். ஆனால் அது முடியாததால் அமமுக என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார். இதனால் தான் அவரை பற்றி பேசுகிறோம்.
5. துரைமுருகன் முதல்வர் மட்டும்தான் வெளியே வருகிறான் துணைமுதல்வர் வெளியில் வருவதில்லை என்று கூறுகிறாரே அது ஏன்? அதற்கு உங்கள் பதில் என்ன?
அவர் அவருடைய கட்சியை பற்றி கவலைப்பட வேண்டும். அழகிரி பற்றி அவர் பேசட்டும். திட்டமிட்ட விஷமத்தனமான பிரச்சாரத்தை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியாது. 13 ஆண்டு காலத்தில் திமுக சாதிக்க முடியாததை, அதிமுக ஒரே வருடத்தில் சாதித்துள்ளது. 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து பல்வேறு நலத் திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளோம்.
இவ்வாறு செய்தியாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசராமல் பதில் அளித்து, தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்பாட்டு இருக்கிறார் தமிழக முதல்வர்.