திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சாப்பிட்டு வச்ச மிச்ச மீதியை தான் 40 நாட்கள் சாப்பிட்டேன்.. சர்வைவர் காயத்ரியின் பகீர் பேட்டி

ஜீ தமிழ் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் இருந்து சென்றவாரம் போட்டியாளர் காயத்ரி, அம்ஜத்கானிடம் தோல்வி பெற்றதால் வெளியேறினார். ஆனால் இவரே மூன்றாம் உலகத்தில் 40 நாட்களுக்கு மேல் தங்கிய போட்டியாளர் ஆவார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி, இந்த நிகழ்ச்சி குறித்து பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார். சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே காயத்ரி அவ்வப்போது மட்டுமே இவருக்கு அளிக்கப்பட்ட டாஸ்கில் வெற்றி பெற்றிருக்கிறார்.

எனவே அதிக அளவிலான தோல்வியை சந்தித்ததால் போட்டியாளர் காயத்ரி மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மூன்றாம் உலகத்தில் வாழ்வது மிகவும் கொடுமையான ஒன்று என்றும் உண்ணுவதற்கு அங்கு எதுவுமே கிடைக்காது என்றும் உறங்குவது கூட ரொம்ப கடினமான ஒரு விஷயமாக இருந்தது என்றும் காயத்ரி பகிர்ந்துள்ளார்.

மூன்றாம் உலகத்தில் அதிக நாட்கள் இருந்த காயத்ரி, அங்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேலாக பட்டினியாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் பிறர் சாப்பிட்டு மீதம் வைத்த உணவை தான் உண்டு வாழ்ந்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

survivor-gayathri-cinemapettai
survivor-gayathri-cinemapettai

மேலும் கடல் காற்றும், இரவு நேரங்களில் அதிக அளவிலான குளிரும் நிலவும் என்றும் அங்கு உறங்குவதற்கு கட்டைகள் மட்டுமே இருக்கும் என்றும் போதிக்க போர்வை கூட இல்லை என்றும் மூன்றாம் உலகமானது கிட்டத்தட்ட நரகத்தை போல் காட்சியளித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார் காயத்ரி.

இனி என் வாழ்நாளில் எனக்கென ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்தால் கூட என்னால் அதிலிருந்து மீண்டேறி வந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை சர்வைவர் நிகழ்ச்சி தனக்கு கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர் காயத்ரி.

Trending News