திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஷூட்டிங்கில் ஹீரோ கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிய தனுஷ் பட தாய்க்கிழவி

Actor Dhanush: அந்த காலத்தில் இருந்து இப்போது வரை ஹீரோயின்கள் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்சனை என்றால் அது அந்தரங்க தொல்லை தான். முன்பெல்லாம் இலை மறை காயாக தெரிந்த இந்த விஷயம் இப்போது நடிகைகளாலேயே வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

அதில் விஜய்யின் மெர்சல், தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நித்யா மேனனும் விதி விலக்கல்ல. தற்போது இவருக்கு தமிழில் முன்னணி இடத்தில் இருக்கும் ஹீரோ ஒருவர் அந்தரங்க டார்ச்சர் கொடுத்தார் என்ற செய்தி தான் இணையதளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டிய தனுஷ்.. மாணிக் பாட்ஷாவாக மாறி ரஜினி மிரட்டிய சம்பவம்

அண்மையில் வேறு மொழி பட விழாவில் கலந்து கொண்ட இவர் இந்த விஷயத்தை ஓப்பன் செய்து இருக்கிறார். அதிலும் சம்பந்தப்பட்ட நடிகர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை ரொம்பவும் துன்புறுத்தியதாகவும், அதனால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அக்கடதேச நடிகர்கள் யாரும் தன்னிடம் இப்படி நடந்து கொண்டது கிடையாது என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். இப்படி ஒரு செய்தி தான் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் யார் அந்த ஹீரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: செஞ்சா உங்கள வச்சு தான் சம்பவம் செய்வேன்.. நித்யா மேனனுக்காக 5 வருடம் காத்துக் கிடக்கும் தனுஷ்

இது ஒரு பக்கம் இருந்தாலும் நித்யா மேனன் இவ்வளவு வெளிப்படையாக தமிழ் சினிமா பற்றியும், ஹீரோக்கள் பற்றியும் கூறியிருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது. ஆனால் உண்மையில் இது ஆதாரமற்றவை என்ற செய்திகளும் ஒரு புறம் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கின்றனர். அதை தீர்க்கும் பொருட்டு நித்யா மேனன் இந்த செய்தியில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது என்று தன் சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

nithya-menon
nithya-menon

 

Trending News