வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகைக்கு மட்டுமல்ல, நடிகருக்கும் அந்தரங்க டார்ச்சர்.. சினிமாவில் நடக்கும் கேவலம்

பொதுவாக சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மென்ட் டார்ச்சர் பற்றி நடிகைகள் வெளிப்படையாக கூறுகிறார்கள். படத்தில் நடிக்க வாய்ப்புக்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் இடம் செல்லும் போது அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் முன் வைக்கிறார்கள்.

ஆனால் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் நடிகர்களுக்கும் இதே போன்று அந்தரங்க டார்ச்சர் நடந்து இருக்கும் செய்தி பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர் ஒருவர் வாய்ப்புக்காக தயாரிப்பாளரை அணுகி இருக்கிறார்.

ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்பு தர முடியாது என சூசகமாக சொல்லி அனுப்பி விட்டாராம். இதனால் வேதனையுடன் இருந்த நடிகர் வேறு ஒரு தயாரிப்பாளரை சந்தித்திருக்கிறார். அவருக்கு பட வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

ஆனால் அப்போது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று ஒரு இருண்ட அறைக்குள் நடிகரை அழைத்தாராம். இதனால் பயந்து போன அவர் வாய்ப்பே வேண்டாம் என்று உடனடியாக அங்கிருந்து நடையை கட்டி விட்டாராம்.

அதன் பிறகு எப்படியோ முட்டி மோதி சினிமாவில் வாய்ப்பு கிடைத்து முன்னணி இடத்திற்கு வந்து விட்டார். மேலும் சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்மென்ட் பிரச்சனை நடப்பது எளிதில் வெளியில் தெரிந்து விடுகிறது.

ஆனால் அதையும் விட கொடுமையாக ஆண்களுக்கு இதுபோன்று நடக்கும் பிரச்சனை வெளியில் தெரிவதில்லை. சினிமாவில் புதுமுக நடிகர்கள் அந்தரங்க டார்ச்சரை தொடர்ந்து அனுபவித்து வருவதாக பிரபலம் கூறியிருக்கிறார்.

Trending News