சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கமல்ஹாசனின் மொத்து மதிப்பு இத்தனை கோடியா? மொத்தத்தையும் சினிமாவில் மட்டுமே முதலீடு

தன் சிறுவயது முதல் சினிமாவில் நடித்து வரும் அவர் 60 பது ஆண்டுகளாக அத்துறையில் பயணித்து வருகிறார். எல்லா நடிகர்களும் மற்ற நடிகர்களுடன் வசூலில் போட்டியிட்டாலும் கமல்ஹாசனின் நடிப்புடன் யாரும் போட்டி போட தயாராக இல்லை. அந்தளவுக்கு பல்வேறு சாதனைகள், விருந்துகளை எல்லாம் பெற்று விட்டார்.

அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே வருங்காலத்தில் வரும் தொழில்நுட்பத்தை எல்லாம் தன் படங்களில் பயன்படுத்திக் காட்டிவிட்டார். அந்தளவுக்கு தொகை நோக்குப் பார்வையுடன் எதையும் அணுகி, தன் ஆர்வம் முயற்சியின் காரணமாக ஹாலிவுட் தொழில்நுட்பத்தையும், திரைக்கதை அமைப்பையும் தமிழ் சினிமாவில் பரிசோதனை செய்து பார்த்து அதிலும் வெற்றி கண்டனர்.

சினிமாவில் 40 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னனி நடிகராக கோலோட்சி வரும் அவர் நடிக்காத கேரக்டர் இல்லை. ஏற்காத பாத்திரங்கள் இல்லை. நடிப்பு, திரைக்கதை, இயக்குனர், தயாரிப்பு, நடன கலைஞர் என அவர் பணியாற்றாத துறைகள் இல்லை. அத்தனையும் அவருக்கு அத்துப்படி, சினிமாவில் நடிப்பதுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் செயல்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 233 படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து கற்றுக் கொண்டு வரும் கலைஞானி. அவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் ரூ.500 கோடி வசூலித்தது. அதன்பின் இந்திய 2 படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. அதன்பின் அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

கமல் தயாரிப்பில் சிவா- சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் ரூ.250 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்து ஒரு படத்திலும், கல்கி 2 மற்றும் விக்ரம் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு

சமீபத்தில் உலக நாயகன் உள்ளிட்ட பட்டங்களை துறந்த அவர் நடிப்பிலும் இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெற்றியாளராக இருந்தாலும் அரசியலில் தோற்றவர் என அவரே கூறியுள்ளார். தான் சம்பாதித்தை சினிமாவில் மட்டும் முதலீடு செய்துள்ள கமலுக்கு ரூ.500 ஓடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு அலுவலகம் சேர்த்து ரூ.20 கோடிக்குமேல் மதிப்பு இருக்கும் எனவும், சொகுசு கார்ககளும் வைத்துள்ளார். விக்ரம் படத்தை அடுத்து கமல் ஒரு படத்தில் நடிக்க ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில், தக்லைஃப் படத்தை அவரே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் சகலகலா வல்லவராக வலம் வரும் கமல் நினைத்திருந்தால் வெளியே ரியல் எஸ்டேட், ஓட்டல் என பலவற்றில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல் சினிமாவில் மட்டுமே முதலீடு செய்து வரும் கலை ஆர்வத்திற்கு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News