உலக கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவரும் கிரிக்கெட்டின் அதிரடி சீசன் டி-20 உலகக்கோப்பை. சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்த இப்போட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
கோவிட்-19 சர்வதேச பரவல் காரணமாக போட்டியை ரத்து செய்து அறிவித்தது ஐ.சி.சி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் எனினும் இந்தியாவில் 2021ஆம் ஆண்டு நடத்துவதாய் அறிவித்து பற்றிய நெருப்பை சற்றே அணைத்திருந்தது ஐ.சி.சி.
இப்போது இருக்கின்ற இரண்டாம் அலை கோவிட்-19 கால கட்டத்தில் இந்தியாலின் மத்திய மாநில அரசுகள் வரிசையாக பொது முடக்கங்களை விடுத்திருந்த தருணத்தில் ஐ.சி.சி க்கு போட்டி நடத்துவதற்கன அனுமதியை மறுத்தது.
அதனை தொடர்ந்து இந்தியாவின் பி.சி.சி உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாற்று ஏற்பாடாக ஐக்கிய அமீரகத்தில் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தது.
இப்போது துபாய் அரசு அதற்கான ஒப்புதலும் அளித்திருந்த நிலையில் ஐ.சி.சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் -17ல் போட்டிகள் துவங்கப்பட்டு நவம்பர்-14ல் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவித்துள்ளது.
ஏற்கனவே வெஸ்ட் இன்டிஸ் இரண்டாம் முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது முதல் சீசன் சாம்பியன் இந்தியாவின் இன்னொரு கோப்பைக்காக காத்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிக்கள்.