வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகள் என்ஜாய் பண்றாங்க.. அம்பலப்படுத்திய இரவின் நிழல் நடிகை

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஒரே வார்த்தை அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தான். முன்பெல்லாம் இது குறித்து பேச தயங்கிய நடிகைகள் தற்போது மீடியாவில் பல ரகசியங்களையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் பல சர்ச்சைகளை எதிர் கொண்ட ரேகா நாயர் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஒரு புது கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகைகளை யாரும் கட்டாயப்படுத்தி அட்ஜஸ்ட்மென்ட் கேட்பதில்லை என்றும், விருப்பத்துடன் தான் நடிகைகள் அதற்கு சம்மதிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read : என் கூட படுத்தா எவ்வளோ காசு கொடுப்பீங்க.? அட்ஜஸ்ட்மெண்ட் போன் காலுக்கு இரவின் நிழல் நடிகை பதில்

ஒருவர் பேசும்பொழுதே அவர் எந்த உள்ளர்த்தத்துடன் பேசுகிறார் என்று நமக்கு தெரிந்துவிடும். அப்பொழுது அதைப் பற்றி புகார் தெரிவிக்காமல் பத்து வருடங்கள் கழித்து என்னிடம் அந்த இயக்குனர் தவறாக நடந்து கொண்டார் என்று கூறுவது எதற்காக என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த பத்து வருடங்களும் நீங்கள் அதை என்ஜாய் செய்தீர்களா என்று அவர் கேட்டுள்ளார். இது தங்களுக்கு நடந்த கொடுமைகளை பல வருடங்களுக்குப் பிறகு மீடியாவில் கூறும் நடிகைகளுக்கு ஒரு சாட்டையடி கேள்வியாக இருக்கிறது.

Also read : ஆர்வக்கோளாறால் பறிபோன வாய்ப்பு.. சொதப்பலில் முடிந்த ரேகா நாயர் போட்ட பிளான்

இப்பொழுது ஆண்கள் பணம் கொடுத்து படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கூறும் நடிகைகள் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு என்ஜாய் செய்தும் வருகின்றனர் என்று கூறி அதிர வைத்துள்ளார். இதன் மூலம் திரையுலகில் சில நடிகைகள் வாய்ப்புக்காக தானே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த வெளிப்படையான கருத்து சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திரை மறைவு லீலைகளை அம்பலப்படுத்திய ரேகா நாயருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இது பப்ளிசிட்டிக்காக பல வருடங்கள் கழித்து மீ டூ புகார் தெரிவிக்கும் சில பிரபலங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்திலும் இருக்கிறது.

Also read : கழுதைக்கு 9 லட்சம் சம்பளம்.. இரவின் நிழல் படத்தை வைத்து நடிகர்களுக்கு பார்த்திபன் சொல்றது இதுதான்

Trending News