திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போலி சாமியார்களை அடக்கி ஒடுக்கிய அயன் லேடி.. மீண்டும் இதுபோன்ற ஆட்சி வாய்பே இல்ல

தமிழகத்தில் அயன் லேடி ஆட்சி செய்த காலம் பொற்காலம் என்றே சொல்லலாம். அமைச்சர், தொண்டர் என அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு ஒவ்வொருவரும் நான்தான் கட்சியின் தலைவர் என தலைதூக்கி உள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க தற்போது போலிச்சாமியார்கள் அதிகமாக வர தொடங்கியுள்ளனர். அதுவும் குறிப்பாக தமிழகத்தில் தான் நிறைய போலிச்சாமியார்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கடவுளின் பக்தன் என்பதை காட்டிலும் நான் தான் கடவுள் என்று சொல்லித் திரிகிறார்கள்.

ஒருகாலத்தில் இவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா. நீ கடவுளாக இருந்தாலும் என் காலின் கீழ் தான் அமர வேண்டும் என்று அவர்களை ஆட்டிபடைத்தார் ஜெயலலிதா. மேலும் அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது இந்த அளவுக்கு போலி சாமியார்களின் ஆதிக்கம் இல்லை.

ஜெயலலிதாவும் கடவுள் நம்பிக்கை உடையவர். ஆனால் மூடநம்பிக்கை, போலிச்சாமியார் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என பல முயற்சிகள் எடுத்துள்ளார். பிரேமானந்தா, நித்தியானந்தா, சங்கராச்சாரியார் ஆகியோர் ஜெயலலிதா இருந்த காலத்தில் சத்தமே இல்லாமல் இருந்தனர்.

மேலும் சங்கராச்சாரியார் ஒரு கொலை வழக்கில் சிக்கிய போது அவரை கைது செய்ய சொல்லி ஜெயலலிதா உத்தரவிட்டார். மக்களை சாமியார்களுக்கு அடிமை ஆகாமல் இருக்க ஒரு அயன் லேடி ஆக தமிழகத்தை ஆட்சி செய்தார் செல்வி ஜெ ஜெயலலிதா.

ஆனால் அவர் இறப்புக்கு பின்பு அவருடைய கட்சியிலேயே பல குழப்பம் இருப்பதால் போலிச் சாமியாரின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோயில்களை விட போலிச்சாமியார்கள் தான் அதிகமாக உள்ளனர். மக்களும் தங்களது கஷ்டம் போக வேண்டும் என்று இவர்களை நம்பி காசை கொட்டித் தீர்க்கின்றனர்.

Trending News