வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இருமுகன் படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக நடிக்கயிருந்த பிரபல நடிகை..  வாய்ப்பு ஒரு தடவதா வரும் மேடம் உங்க இஷ்டத்துக்கு வராது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா இவரது நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் தமிழில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றன அதற்கு காரணம் ஒரு பக்கம் கவர்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்கள்தான்.  சினிமாவின் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் நயன்தாரா முன்னணி நடிகருடன் மட்டும் தான் கூட்டணி அமைப்பார்.

 ஆனால் சினிமாவில் வளர்ந்த பிறகு சிறு சிறு நடிகர்களுடன் நடிக்க  தயங்கினார் அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைவதைக் கண்ட நயன்தாரா இனி வேலைக்காகாது யாராக இருந்தாலும் நடிக்க வேண்டி தான் என முடிவெடுத்து அனைத்து தரப்பு நடிகர்களுடனும் நடிக்க ஆரம்பித்தார். அதில் வெற்றியும் கண்டார்.

 தமிழ் சினிமாவில்  நயன்தாரா நடித்த முக்காவாசி படங்களில் முதலில் வேறு ஒரு நடிகை தான் கமிட்டாகி இருப்பார்கள் ஆனால் பின்பு ஏதாவது ஒரு பிரச்சினையால்தான்  அந்த படத்திற்கு நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பார். அப்படி நயன்தாரா ஒப்பந்தம் ஆகி நடித்த படங்கள் ஏராளம்.

kajal-agerwal-cinemapettai
kajal-agerwal-cinemapettai

விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்தில் நயன்தாரா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் முதன்முதலில் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது காஜல் அகர்வால் தான். ஆனால் அப்போது காஜல் அகர்வால் தெலுங்கில் படு பிசியாக நடித்துவந்ததால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

அதேபோல் நித்யாமேனன் கதாபாத்திரத்திற்கும் ப்ரியா ஆனந்த் தான் முதலில் தேர்வாகியுள்ளார். பின்பு ஒரு சில கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. ஒரு பக்கம் அவர்களது கால்ஷீட்குட்நைட் காணலாம் கொடுத்தது பிரச்சினை காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் புரோடக்சன்  பிரச்சனையின் காரணமாகவும் இவர்களால் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News