வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கனவுக்காக வைராக்கியத்தை கைவிட்ட சந்தானம்.. AK 62 அஜித்துடன் நடிக்க இப்படி ஒரு காரணமா?

அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள துணிவு திரைப்படம் வெற்றி வாகை சூடியிருக்கிறது. இதை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

இந்தப் படத்தில் தான் சந்தானம் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது. அதை தொடர்ந்து சந்தானம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடிக்க இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் சில காரணமும் இருக்கிறதாம்.

Also read: வாரிசு, துணிவு படங்களை ரத்து செய்த தியேட்டர்கள்.. அஜித்,விஜய்யை யோசிக்க வைத்த சம்பவம்

அதாவது சந்தானம் சமீப காலமாக ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். அதையும் தாண்டி காமெடி வாய்ப்பு வந்தாலும் அவர் ஏற்க மறுத்து விடுகிறார். இந்த நிலையில் எப்படி அஜித் படத்தில் அவர் நடிக்க சம்மதித்தார் என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது. மேலும் சந்தானம் இப்போது தன்னை தேடி வரும் அத்தனை வாய்ப்புகளையும் ஏற்றுக் கொண்டு வருகிறாராம்.

ஏனென்றால் அவர் இப்போது போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கி இருப்பது அனைவருக்கும் தெரியும். சொல்லப்போனால் இந்த விஷயம் மிகவும் ஆச்சரியமாக கூட பேசப்பட்டது. அதாவது சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் அவர் சில கடன் நெருக்கடிக்கும் ஆளானார். அப்படி இருக்கும்போது அவர் போயஸ் கார்டனில் வீடு வாங்கி இருப்பது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்.

Also read: அஜித் சாரை பார்த்து கத்துக்கோங்க.. மனைவியிடம் திட்டு வாங்கிய வாரிசு நடிகர்

ஆனால் இந்த வீட்டை வாங்குவதற்கு முன்பே அவர் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டாராம். அதில் ஒன்றுதான் ஏகே 62 திரைப்படம் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு இருக்கும் கடன் நெருக்கடி அப்படியே தான் இருக்கிறது. ஆனால் போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்பது அவருடைய பல வருட கனவு.

அதை நிறைவேற்றுவதற்காக தான் இப்போது அவர் தன்னுடைய பழைய ரூட்டுக்கு திரும்பியிருக்கிறார். அந்த வகையில் சந்தானம் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற வைராக்கியத்தை தன்னுடைய கனவிற்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். அதனால் இனி அவரை அடுத்தடுத்த திரைப்படங்களில் பார்க்க முடியும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: கல்லூரி காலத்து ரோலேக்ஸ் மற்றும் மருது.. இதுவரை வெளிவராத லயோலா காலேஜ் போட்டோ

Trending News