BJP Annamalai new party: 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியாகி மோடி தலைமையிலான அரசு நாளை 3வது முறையாக பதவியேற்க உள்ளது. என்னதான் மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடிய வில்லை என்ற தலைவலி மோடியின் விஸ்வாசி அண்ணாமலையின் தூக்கத்தை கெடுத்து விட்டதாம்.
அரசியல் பிரச்சாரத்தின் போது அண்ணாமலை பேசிய பேச்சுக்கு அவர் நின்ற கோயமுத்தூர் தொகுதியிலையாவது ஜெயித்திருக்க வேண்டும் ஆனால் ஒன்றும் வழியில்லாமல் தற்போது கடுமையான இன்னலுக்கு உள்ளாகி உள்ளார். இவரை எதிர்த்து நின்ற திராவிட கட்சியை சேர்ந்த கணபதி 41.4 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து இருந்தால் மத்தியில் பொறுப்பு உண்டு எனக் கூறி களத்தில் இறக்கப்பட்டவர் அண்ணாமலை.
இதற்காக பிஜேபியின் முக்கியமான சில தலைவர்களை பகைத்துக் கொண்டுதான் தேர்தல் களத்தில் நின்றார். திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் அன்புமணி ராமதாஸ், சரத்குமார் இன்னும் சில கட்சிகளை வைத்து 40 தொகுதிகளிலும் தோற்றுப் போனதுதான் மிச்சம்.
இதனால் பெரும் மன உளைச்சலில் இருக்கும் அண்ணாமலைக்கு மத்தியில் இருந்து எந்த ஒரு பதவியும் கிடைக்காது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. அப்படியே கிடைத்தாலும் அதனை அவர் ஏற்பாரா என்பது சந்தேகம்தான்.
கல்யாண் ராமன் போட்ட ட்வீட்
இதைத் தவிர கல்யாணராமன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் போன்ற முக்கிய பிஜேபி புள்ளிகள் அண்ணாமலையை பற்றிய புகார்களை அவர் செய்த தில்லாலங்கடி வேலைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இது தற்போது அரசியல் களத்தில் அண்ணாமலைக்கு பெரும் நெருக்கடி கொடுத்துள்ளது. கல்யாணராமன் போட்ட பதிவிற்கு தமிழிசை சௌந்தரராஜன் லைக் போட்டு உள்ளது இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கல்யாண் ராமன் ட்வீட்டை லைக் செய்த தமிழிசை
ஏற்கனவே 2014 இல் வாங்கிய ஓட்டு சதவீதம் தான் 2024-லும் வாங்கியுள்ளனர் மத்தியில் ஆளும் பிஜேபி. 35 லட்சம் ஓட்டு வாங்கி மாநில அந்தஸ்தை பெற்ற நாம் தமிழர் கட்சியுடன் ஒப்பிடக்கூட முடியாமல் திக்கி திணறி வருகிறது பிஜேபி. இன்னும் சொல்லப்போனால் மோடி பதவியேற்கும் விழாவில் கடைசி சீட்டை கொடுத்துள்ளார்கள். இது இன்னும் அவமானமாக பார்க்கப்படுகிறது.
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை அரசியல் வியூகம்
ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாத அண்ணாமலை 11 சதவீதத்திற்கு மேல் ஓட்டு வாங்கியது தன் முகத்திற்காக மட்டுமே என்ற மமதையில் தற்போது புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக்கொண்டு வருகின்றனர். கோயமுத்தூரில் மட்டும் 37 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை விரைவில் முழு அறிக்கையாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் மாதிரி புதிய கட்சி தொடங்கினால் மட்டும்தான் ஓட்டு எண்ணிக்கை அதிகரித்து வரும் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது அண்ணாமலையின் கணிப்பு. அப்படி தொடங்கும் புதிய கட்சிக்கு மற்ற கட்சியில் இருந்து கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.
கூட்டணிக்கு வாய்ப்புள்ள காட்சிகள்:
தமிழக வெற்றிக்கழகம்
நாம் தமிழர் கட்சி
தமிழ் மாநில காங்கிரஸ்
பாட்டாளி மக்கள் கட்சி
40 தொகுதிகளிலும் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்து விழுந்த ஓட்டுகள் அனைத்தும் தான் முகத்திற்காக மட்டுமே என்பதில் தெள்ளத் தெளிவாக உள்ளாராம் அண்ணாமலை.