செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஊத்தி மூடப்பட்டதா சந்திரமுகி 2? பெருமூச்சு விடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்

சமீபகாலமாக சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற தவறுகின்றன. இதனால் சூப்பர் ஸ்டார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமும் வர வேண்டாம் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கியிருந்த இந்தப் படம் வசூலை வாரி குவித்தது. அதுமட்டுமில்லாமல் 700 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக நாசர் மற்றும் வடிவேலு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இந்நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் உருவாகப் போவதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் அந்த படத்தை பி வாசு இயக்கப் போவதாகவும் தகவல்கள் வந்தன. மேற்கொண்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சந்திரமுகி 2 படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார்கள். அறிவிப்பு வெளி வந்ததோடு சரி. அதன்பிறகு தற்போது வரை சந்திரமுகி 2 படத்தை பற்றிய எந்த செய்திகளும் வெளிவராததால் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் சந்திரமுகி 2 படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், சந்திரமுகி 2 படம் கைவிடப்படவில்லை எனவும், ருத்ரன் படத்திற்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் பல ரசிகர்களுக்கு சந்திரமுகி 2 படம் வருவதில் விருப்பம் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

chandramukhi2-cinemapettai
chandramukhi2-cinemapettai

சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி சொதப்பி முதல் படத்தின் வெற்றியை அது வெகுவாக பாதிக்கின்றன. இதனால் சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றியை சந்திரமுகி 2 படம் மறக்க வைத்து விடுமோ என ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

Trending News