சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு அநீதியா.. செய்தியாளர்களுக்கு கொடுத்த செம டோஸ்

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வரும் ஜூன் 2ம் தேதி அவருடைய வீரன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. மரகத நாணயம் பட இயக்குனர் ஏஆர் சரவணன் இயக்கிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் கதாநாயகியாக அதிரா ராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் வில்லனாக வினய் ராய் மற்றும் முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் பேசினார். அப்போது ஹிப்ஹாப் ஆதிக்கு வீரன் படத்தில் இப்படி ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவந்துள்ளது.

Also Read: ஒரே படத்தில் நடிகைகளை மயக்கிய ஹீரோக்கள்.. திருமணம் செய்த 5 நட்சத்திர ஜோடிகள்

ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத ஆதி செய்தியாளர்களுக்கு தான் செம டோஸ் கொடுத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் தான் ஆதி டாக்டர் பட்டம் வாங்கிய நிலையில், இந்த படத்தில் அதை அவருடையபெயருக்கு பின்னால் குறிப்பிடவே இல்லை. இதனால் உங்களுக்கும் இயக்குனருக்கும் ஏதாவது பிரச்சனையா? என்று செய்தியாளர் ஆதியிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஆதி, இந்த மாதிரி சர்ச்சையான கேள்விகளை தயவு செய்து கேட்காதீர்கள். அப்படி ஒன்றும் இல்லை. நீங்களே புதிதாக ஏதாவது கிளப்பி விடாதீர்கள். படத்தில் இருக்கும் பிளஸ்சை மட்டும் பாருங்கள். படம் லீஸ் ஆகுவதற்கு முன்பே ஆப்படித்து விடாதீர்கள் என வெளுத்து வாங்கிவிட்டார்.

Also Read: கேப்டன் மில்லருக்கு ரெண்டு கதை சொல்லி இருக்கேன்.. விளம்பரம் தேடும் ஹிப்ஹாப் ஆதி இயக்குனர்

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் ஹிப்ஹாப் ஆதி வீரன் படத்தைக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். குழந்தைகளுக்கு பிடித்த படமாக இந்த படம் இருக்கும். நிச்சயம் முகம் சுளிக்கும் காட்சிகள் எதுவுமே கிடையாது. அதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வரலாம்.

தற்போது கோடை கால விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். மேலும் செய்தியாளர் சிலர் அரசியலைக் குறித்த கேள்விகளையும் கேட்டதற்கு அதை வேறு ஒரு இடத்தில் பேசலாம் என்று தட்டிக் கழித்து விட்டார்.

Also Read: என்னது ஹிப்ஹாப் ஆதிக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா.? சீக்ரெட்டாக வெளிவந்த புகைப்படம்

Trending News