புதன்கிழமை, மார்ச் 12, 2025

மாஸ்டர் மூலம் ரஜினியை ஓரம் கட்டினாரா விஜய்? வேண்டுமென்றே தளபதியை தூக்கி விட காரணம் என்ன?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சுகள் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக கேட்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே விஜய்யின் படங்கள் ரஜினியின் படங்களை விட அதிக வசூல் செய்வதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அதுமட்டுமில்லாமல் ரஜினி படங்களை விட விஜய்யின் படங்கள் அதிக வியாபாரமாவதாகவும் பலரும் பல பேட்டிகளில் தெரிவித்தனர்.

ஆனால் ஒரே சூரியன், ஒரே சந்திரன் என்பதைப்போல தமிழ் சினிமாவுக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் ரஜினி ரசிகர்கள் அப்போதிலிருந்து மல்லுக் கட்டிக் கொண்டே இருக்கின்றனர். விஜய் ரசிகர்களும் அடுத்த சூப்பர் ஸ்டார் தளபதி தான் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு விஜய்யின் மாஸ்டர் படம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது.

master-cinemapettai
master-cinemapettai

இந்த சமயத்தில் படத்தை வெளியிட்டால் லாபம் தருமா என பல மொழி முன்னணி நடிகர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது விஜய் அதை செய்து காட்டினார். மொழி தெரியாத ரசிகர்களுக்கு கூட விஜய் யார் என்பது மாஸ்டர் படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் மாஸ்டர் படம் வெளியாகி வெறும் 8 நாட்களில் 200 கோடி வசூல் செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது விஜய்யின் நாளாவது 200 கோடி வசூல் படம் என்கிறார்கள் வசூல் நிலவர வட்டாரங்கள்.

ரஜினி சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே வேண்டுமென்றே எதற்காக தளபதி விஜய்யை தூக்கி வைத்துப் பேசுகிறார்கள் என்பது தற்போது வரை புரியாத புதிராகத்தான் உள்ளது. ஆயிரம் சொன்னாலும் 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவ்வளவு எளிதில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

Trending News