Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், தனத்தை தவறாக எடுத்த வீடியோவை வைத்து கார்த்திக் ஒவ்வொரு நாளும் மாயாவை பயமுறுத்தி வந்தார். அந்த வகையில் தனத்தை எப்படியாவது தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று கார்த்திக்கு ஒரு கடிதம் எழுதி தனத்திடம் கொடுக்க சொன்னார். ஆனால் அந்த கடிதம் தனத்தின் கையில் கிடைக்காமல் மாயா கையில் கிடைத்து விட்டது.
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சியான மாயா, எப்படியாவது நிரந்தரமாக தனத்தை கார்த்திக்கிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணினார். அதனால் கார்த்திக் கூப்பிட்ட இடத்திற்கு தனத்திற்கு பதிலாக மாயா போக துணிந்து விட்டார். இந்த விஷயத்தை பற்றி ஜானகிடம் சொல்லிய நிலையில் மாயா வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.
அத்துடன் கார்த்திக் வர சொன்ன இடத்திற்கும் மாயா போய் விட்டார். பிறகு மாயா, தனம் மாதிரி கார்த்திக்கிடம் பேசி அந்த வீடியோவை கேட்டார். கார்த்திக்கும் அந்த போனை கொடுப்பதற்கு முன் அதில் இருக்கும் வீடியோவை லேப்டாப்பில் அனுப்பி வைத்துவிட்டு ஃபோனை மாயாவிடம் கொடுத்து விட்டார்.
அப்படி கொடுத்த பிறகு இது தனம் இல்லை மாயா தான் என்று கார்த்திக் தெரிந்ததால் கோபமடைந்துவிட்டார். இருந்தாலும் மாயாவை விடக்கூடாது என்பதற்காக தவறாக நடக்க முயற்சி செய்தார். அப்பொழுது மாயா தலையில் அடிபட்டு விட்டது. உடனே கார்த்திக் தவறு செய்ய நினைக்கும் பொழுது ஜானகி வந்துவிட்டார்.
ஜானகி கார்த்திக்கிடமிருந்து மாயவை காப்பாற்ற எவ்வளவோ போராடினார். ஆனால் முடியாத பட்சத்தில் அங்கே இருந்த ஒரு கம்பியை எடுத்து கார்த்திக் தலையில் போட்டு விட்டார். பிறகு ஜானகி மாயாவை எழுப்பி கூட்டிட்டு போகலாம் என்று எழுப்பினார். மாயா எழுந்ததும் கார்த்திக் தலையில் ரத்தம் போய்க்கொண்டே இருப்பதை பார்த்து மூச்சு இருக்கிறதா என்று செக் பண்ணுகிறார்.
ஆனால் இல்லை என்று மாயா நினைத்ததால் கார்த்திக் இறந்துவிட்டார் என்று முடிவு பண்ணி யாருக்கும் தெரியாமல் நாம் இங்கு இருந்து போய்விடலாம் என ஜானகி மற்றும் மாயா அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ஆனால் இவ்வளவு விஷயத்தையும் சாறுவின் அப்பா மகாலிங்கம் ஜன்னல் வழியாக எல்லாத்தையும் பார்த்து விட்டார்.
அடுத்ததாக கார்த்திக் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறார் என்று மகாலிங்கத்துக்கு தெரிந்த நிலையில் கார்த்திக் உயிரோடு இருந்தால் ஜானகி தப்பிச்சு விடுவார் என்ற நினைப்பில் அந்த மகாலிங்கம், கார்த்திகை கொலை செய்து விடுவார். பிறகு இந்த பழி அனைத்தும் ஜானகி மீது விழுந்து விடும்.
ஜானிக்கும் நான்தான் கார்த்திகை கொன்றுவிட்டோம் என்ற நினைப்பில் உண்மையை ஒத்துக் கொண்டு ஜெயிலுக்கு போக துணிந்து விடுவார். ஆனால் மாயா, ஜானகி பெரியம்மாவை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவார். அப்பொழுது தான் கார்த்திக் இறப்பிற்கு காரணம் ஜானகி இல்லை மகாலிங்கம் தான் என்ற உண்மை தெரிய வரும்.